நடிகை சுகாசினி மணிரத்தினம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் எப்படி நடந்தது என்பதை மறக்காமல் மனதில் இருக்கும் பசுமையான நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் இவர்களது திருமணம் ஆனது அலைபாயுதே படத்தில் வரும் வீட்டை போல இருக்கக்கூடிய இடத்தில் நடந்ததாகவும், அந்த காட்சியைத் தான் மணிரத்தினம் அலைபாயுதே படத்தில் காட்சிகளாக வைத்திருக்கிறார் என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டார்.
இவர்களுக்கு திருமணம் நடந்த அந்த வீடு ஒரு உறவினரின் வீடு என்றும் வீட்டின் கட்டுமான பணி முழுவதும் நிறைவடையாமல் இருந்தது.அவ்வளவு ஏன்? அந்த வீட்டுக்கு பெயிண்ட் கூட அடிக்கவில்லை. ஜன்னல்களில் ஓட்டை இருந்தது. அது போன்ற ஒரு இடத்தில் தான் இவர்களது திருமணம் நடந்ததாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் திருமணத்தை வெறும் இரண்டு நிமிடத்தில் முடித்து விட வேண்டும் என்று இருவரும் சேர்ந்து திட்டமிட்டதாக கூறியதோடு, திருமணத்திற்கு மணிரத்தினம் அங்கு வந்து சேர்ந்த பின் செய்திருக்கும் ஏற்பாடுகளை பார்த்து வியந்து போனதோடு மட்டுமல்லாமல் இரண்டு நிமிடங்கள் போதாது மிகவும் சிறப்பாக உள்ளது நடப்பது நடக்கட்டும் என்று சந்தோசமாக கூறிவிட்டார்.
இதனை அடுத்து எனது மனதில் சஞ்சலம் ஏற்பட்டதை அடுத்து என்னுடைய முகம் சுருங்கிப் போனது. அதற்கு காரணம் திடீர் என்று மணிரத்தினம் எடுத்த முடிவுதான். அடுத்து திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.
திருமணம் ஆன புதிதில் மணி என்னிடம் நடக்க வேண்டிய இடத்தில் ஓடுகிற பெண் வேண்டும் என்று நினைத்தேன் என கூறியிருக்கிறார்.அப்படி என்றால் நான் என்று கேட்ட கேள்விக்கு தவழ வேண்டிய இடத்தில் பறக்கிற பெண் எனக்கு கிடைத்திருக்கிறாள் என்று புன்னகை போக்க கூறியது, இன்னும் என் மனதில் அப்படியே உள்ளதாக தெரிவித்தார்.
திருமணம் ஆன புதிதில் கணவனின் பெயரை சொல்லி அழைக்கக்கூடாது என்ற காரணத்தால் அவரை பிஷ்.. பிஷ்.. என்று சொல்லியே அழைத்து வந்தேன். இதனை அடித்து அவர் என்னிடம் ஏன் நீ இப்படி அழைக்கிறாய் என்று கேட்டார்.
இதற்கான காரணத்தை சொன்ன பிறகு இனி நீ என்னை மணி என்று அழைத்து விடு என்று கூறினார். அன்றிலிருந்து இன்று வரை அவரை மணி என்று தான் நான் அழைக்கிறேன்.
மேலும் திருமணம் ஆவதற்கு முன்னால் அவர் எனக்கு கொடுத்த பரிசு மறக்க முடியாது.
ஒரு நாள் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மூட்டை இருந்தது. அந்த மூட்டையை விதவிதமான ஆடைகளும் இருந்தது. இவை அனைத்தையுமே எனக்கு என்று அவர் பரிசாக கொடுத்தார். இவர் எனக்கு கொடுத்த முதல் பரிசு இது தான் என்று அவர்களது திருமண வைபோகத்தை பற்றி பேசினார்.