சிம்ரனின் காதலை பிரித்து விட்ட பிரபல நடிகர்..! - யாரும் எதிர்பார்க்காத சோகக் கதை..!

 


90களில் காலகட்டங்களில் கனவு கன்னியாக தமிழ் ரசிகர்களின் இதயத்தை துளைத்து இரவு தூக்கத்தை கெடுத்த நடிகை தான் சிம்ரன். பெயருக்கு ஏற்றபடி படு ஸ்லிம்மாக இருக்கும் இவரது நடனத்தைக் கண்டு மயங்காத தமிழர்களே இல்லை என்று கூறலாம். 

இவர் நடிக்கக்கூடிய படங்களை பார்க்க வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு என காத்திருந்தார்கள். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் என்று கூறலாம். 

குறிப்பாக இவர் கமல், பிரபுதேவா, பிரசாந்த், விஜயகாந்த், எஸ் ஜே சூர்யா, விஜய், அப்பாஸ் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். 

அது மட்டுமா? இவர் நடிப்பில் வெளிவந்த பூச்சூடவா, நட்புக்காக, நேருக்கு நேர், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சர தந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்கள் இந்த திரை உலகம் இருக்கும் வரை அவர் பெயர் சொல்லும் வண்ணம் உள்ளது என கூறலாம். 

இப்படி படு ஜோராக சென்று கொண்டிருந்த இவரது திரை உலக வாழ்க்கை எப்படி சருக்களை சந்தித்தது என்பதை அறிந்து கொண்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். எப்படிப்பட்ட கேரக்டர் ரோலையும் எளிமையாக செய்யக்கூடிய தன்மை கொண்ட சிம்ரன் நடிப்பில் சூரப்புலி என்று கூறலாம். 

இவருக்கும் நடன மாஸ்டராக திகழ்ந்த ராஜூ சுந்தருக்கும் இடையே காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் ராஜூ சுந்தரமும் ,சிம்ரனும் ஐ லவ் யூ டா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். 


எனினும் இந்த படம் அவ்வளவு சரியாக ரீச் ஆகவில்லை. இதனை அடுத்துத்தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும் ராஜூசுந்தரத்திற்கு சிம்ரன் மற்ற நடிகர்களோடு இணைந்து நெருங்கி நடித்தால் தாங்க முடியாதாம். அப்படித்தான் ஒரு சமயம் கமலுடன் சிம்ரன் நடித்த போது ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. 

உடனே இந்த தகவலை அறிந்து கொண்ட காதலர் இரவு நேரத்தில் சிம்ரனை வெளியே அழைத்துச் சென்று இது போல நடிக்க கூடாது என்று சண்டை போட்டு நடுரோட்டில் தன்னந்தனியாக தவிக்க விட்டதற்கு கமலஹாசன் தான் காரணம் என்று ஒரு பேச்சு உள்ளது. 

இந்த சூழ்நிலைகள் தான் ராஜூ சுந்தரத்திற்கும் சிம்ரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இவர்கள் காதல் பிரிந்தது என்று கூறுவதோடு, இவர்கள் காதல் முறிவதற்கு காரணம் உலகநாயகன் என்று பல்வேறு ஊடகங்கள் அப்போதே செய்திகளை வெளியிட்டது. 

எனினும் அது வதந்தி என்று ஒரு சிலர் மறுத்தாலும் திருமணத்துக்குப் பிறகு சிம்ரன் நடிக்க கூடாது என்று ராஜு சுந்தரத்தின் குடும்பத்தார் கூறியதை அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். 

இதனை அடுத்து தான் கமலும், சிம்ரனும் இணைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.