இத்தாலியில் நைட் போதை பார்ட்டி வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி..! - இன்று டூம்.. டூம்.. டூம்..!


நட்சத்திர காதல் ஜோடியான வருண் தேஜ் லாவண்யா திரிபாதி திருமணம் இன்று மதியம் நடக்க உள்ள நிலையில் இவர்கள் குடும்பத்தோடு இத்தாலியில் நைட் போதை பார்ட்டி கொண்டாடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக தெரிகிறது. 

இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகனான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி மிஸ்டர் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும் போது அவர்களுக்குள் காதல் அரும்பியது. இதனை அடுத்து இருவரும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

இவர்கள் காதலை வெளிப்படுத்திய இடம் இத்தாலி என்பதால் தான் அங்கு இரவு பார்ட்டியை நடத்தி அமக்களப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இத்தாலியிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கும் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்து முடிந்து விட்டது. 

இந்நிலையில் இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள இரு வீட்டின் குடும்ப நபர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இத்தாலிக்கு சென்றிருக்கிறார்கள். எனவே இரு குடும்பத்தாரும் நான்கு நாட்களுக்கு முன்பே இத்தாலி சென்றுள்ளதால் அடிக்கடி குடும்பத்தோடு வெளியே சென்று வெகேஷனுக்கு சென்றது போல இந்த திருமண நிகழ்வை என்ஜாய் செய்து வருகிறார்கள். 

அந்த வகையில் தான் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் தங்களுடைய குடும்பத்தாருக்கு பிரம்மாண்ட காக்டெயில் பார்ட்டி கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சுரேகா, ராம்சரண், உபசனா, சிருவின் மகள்கள்,பவன் கல்யாண்,பாபி,அல்லு அரவிந்த் போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த பார்ட்டியின் போது ராயல் லுக்கில் திருமண செய்து கொள்ளப் போகிறவர்கள் இருந்திருக்கிறார்கள். இருவரும் வெள்ளை நிற பிரேசர் கருப்பு பான்ட், லாவண்யா வெள்ளை தேவதைகளாக ஜொலித்திருக்கிறார்கள். குடும்பம் முழுமையும் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடைகளை அணிந்து அசத்தலாக இருந்தார்கள். 

இன்று மதியம் 2 மணி 48 நிமிடத்தில் திருமணம் நடக்க உள்ளது. இத்தாலியில் இருக்கும் நெருங்கிய குடும்பத்தார் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள போகிறார்கள். 

மேலும் வெட்டிங் ரிசப்ஷன் ஆனது நவம்பர் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.