" முதன்முறையாக அதுக்கு தடை போடும் விக்கி..!" - அப்செட்டில் நயன்தாரா..!

 

தென் இந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் நயன்தாரா, விக்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆறு மாதத்திற்குள் வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு திரை வாய்ப்புகள் அதிக அளவு கிடைக்கவில்லை. 

மேலும் தமிழ் சினிமாவில் திரிஷாவின் கை ஓங்கி உள்ளது. இதனை அடுத்து விஜய் மற்றும் அஜித் படங்களில் திரிஷா நடிக்க கமிட் ஆகி இருப்பதை அறிந்து நயன்தாரா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். 

இதனை அடுத்து தனக்கு வாய்ப்பு கொடுக்காத அவர்களின் முகத்தில் கரியை வாரி பூச வேண்டும் என்ற எண்ணத்தில் பாலிவுட் படத்தில் நடிக்க களம் இறங்கி விட்டார். மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த ஜவான் திரைப்படம் பெரிய அளவு வெற்றியை தந்ததை அடுத்து, இரண்டு பாலிவுட் படங்கள் தற்போது நயன்தாரா கைவசம் இருப்பதாக அதிகாரப்பூர்வமான அப்டேட்டுகள் வெளி வந்துள்ளது. 

ஆனால் நயன்தாராவின் இந்த பாலிவுட் பட பயணத்திற்கு இடைஞ்சலாக இருப்பது அவரது கணவர் விக்னேஷ் சிவன். இதற்கு காரணம் ஆரம்ப நாட்களில் கவர்ச்சி காட்டி நயன்தாரா நடித்திருந்தாலும், அடுத்தடுத்து பெண்களுக்கு உரிய கண்ணியமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வந்தார். 

அந்த வகையில் ஜவான் படத்தில் சற்று கவர்ச்சி காட்ட ஆரம்பித்து இருக்கக்கூடிய இவர், அடுத்தடுத்த பாலிவுட் பட வாய்ப்பினை பெறுவதற்கு எல்லை மீறும் கிளாமரை காட்டுவதற்கு முயல்வாரோ என்ற எண்ணத்தில் விக்னேஷ் சிவன் இருக்கிறார். 

எனவே தான் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதை தடுக்கும் பொருட்டு நயன்தாராவின் நடிப்பு ஆசையை தடை போடுவதோடு, அந்த ஆசையை திசை திருப்ப பிளான் செய்து பிசினஸ் செய்வதை போக்கஸ் செய்து வருகிறார். 

இதனை அடுத்து தான் இவர் 9 ஸ்கின் எனும் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்க களம் இறங்கி இருக்கிறார்கள்.மேலும் பல விதமான பிசினஸ்களில் பணத்தை முதலீடு செய்திருக்கும் நயன் பிசினஸில் எதிர்பார்க்கக் கூடிய லாபத்தை இன்னும் எடுக்காத நிலையில் பயங்கர அப்செட்டில் இருக்கிறார். 

இதனால் தொழில் கை கொடுக்காவிட்டால் மீண்டும் பாலிவுட்டுக்கு கவர்ச்சிகரமாக நடிக்க சென்று விடுவாரோ என்று விக்கி பயத்தில் இருக்கிறார். 

தமிழ் திரைப்படத்தை பொறுத்தவரை நயன்தாரா தற்போதைக்கு அன்னபூரணி என்ற படத்தில் கமலஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளது.