"காதலனுடன் மஜா போஸ்..!"- இளசுகளின் வயிற்றெரிச்சலை கிளப்பிய தமன்னா..!

 

அட.. இது நமது தமன்னாவா? என்று கேட்க கூடிய வகையில் தற்போது தன் காதலனுடன் இணைந்து இருக்கக்கூடிய மஜாவான போட்டோவை வெளியிட்டு இளசுகளின் மனதில் அந்த மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தி அவர்களின் சாபத்தை வாங்கிக் கொண்டார் என கூறலாம். 

தமன்னாவை பொருத்தவரை கேடி படத்தில் வில்லியாக நடித்து அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். 

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்து இருக்கக்கூடிய தமன்னா பாகுபலி படத்தில் நடித்ததை அடுத்து இவரது மார்க்கெட் எகிறியது. 


இதனை அடுத்து இவர் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமிழகத்தையே அதிரவிட்டார்.இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய தமன்னா தற்போது தனது காதலன் விஜய் வர்மாவோடு நடத்திய ரொமாண்டிக் போட்டோ சூப்பர் சமூக வலைதள பக்கங்களை கலர்ஃபுல்லாக மாற்றிவிட்டது என கூறலாம். 

இளசுகளின் வயிற்றெரிச்சலை வாரிக்கொட்டி இருக்கும் இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது. இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை ரசிகர்கள் வாரிக் கொடுத்திருக்கிறார்கள். 


நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை என்ன என்பது உங்களுக்கு எளிதாக தெரிந்து விடும். அதுமட்டுமா? இந்த புகைப்படத்தை பார்த்ததோடு நின்று விடாமல் உங்களுக்கு திருமணம் பற்றி எப்போது சொல்வீர்களா? என்பது போன்ற கேள்விகளை தமன்னாவிற்கு இளைஞர்கள் விடுத்திருக்கிறார்கள்.

இதற்குரிய பதிலை விரைவில் தமன்னா அறிவிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் காத்திருப்புக்கு உரிய பதில் கிடைக்குமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.