“டேய்.. கோவணத்த உருவி விட்டு விடுவேன்..!!” - என்கிட்டயே வா.. ஆவேசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான்..!

 

தென்னிந்திய முன்னணி நடிகையாக திகழும் திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபமாக மாறியதோடு மட்டுமல்லாமல் எங்கும் பேசும் பொருளாக உள்ளது. 

இதனை அடுத்து மன்சூர் அலிகானுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் பல பிரபலங்கள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். எனினும் இதைப் பற்றி எல்லாம் மன்சூர் அலிகான் கவலைப்படுவதாக தெரியவில்லை. 

இவர் தனது தவறை மறைக்கக் கூடிய வகையில் நான் பேசிய கருத்தை கட் செய்து போட்டு இருக்கிறார்கள். நான் நல்ல விதமாக தான் பேசுகிறேன் என்று பூசி மழுப்பி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் சங்கம் தான் தற்போது பெரிய தவறை செய்துவிட்டது என்பதை உறுதியாக தெரிவித்திருக்கிறார். 

இதனை அடுத்து இது மாதிரியான வீடியோக்கள் வந்தால் அதைப்பற்றி என்னிடம் இவர்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு கேள்வியும் இவர்கள் பக்கத்தில் இருந்து கேட்கவில்லை. இவ்வளவு ஏன் ஒரு போன் கூட செய்யவில்லை என்று அவர் பாணியில் பேசி இருக்கிறார். 

நீதிமன்றங்களில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது நீதிபதி பார்த்த உடனேயே யாருக்காவது தண்டனை கொடுப்பாரா? நடிகர் சங்கம் தான் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டது. 

எனக்கு கோபம் வந்தால் கோமணத்தை உருவி அனுப்பி விடுவேன் என்று உச்சகட்ட கோபத்தில் வார்த்தைகளை வீசி இருக்கிறார். இதனை அடுத்து மன்சூர் அலிகான் செய்கின்ற செயல் சரியாக இல்லை என்று பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளதோடு இந்த பேச்சினை இணையம் முழுவதும் நெட்டிசன்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் எங்கள் பக்கத்துக்கு லைக் செய்யுங்கள். உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்துவிட்டு வண்ணத்திரையோடு எப்போதும் இணைந்திருங்கள்.