மேலாடை இல்லாமல் லிஃப்டில் ராஷ்மிகா..! - தீயாய் பரவும் வீடியோ..! - உண்மை என்ன..?


உண்மையாகவே இது ராஷ்மிகாவின் வீடியோவா? என்று கேட்கக் கூடிய வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் ராஷ்மிகா மந்தனா அரை நிர்வாண உடையில் லிப்டுக்குள் வருவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. ராஷ்மிகா மந்தானாவின் டீப் பேக் (Deep Fake) வீடியோ வெளி வந்து கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு எதிராக பலரும் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருவதோடு மட்டுமல்லாமல், ராஷ்மிகா மந்தானாவுக்கு உரிய ஆதரவை தந்து வருகிறார்கள் என கூறலாம். குறிப்பாக இந்த வீடியோவிற்கு சூப்பர் ஸ்டாரும் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். 

இந்த வீடியோவில் பிரபலமான நடிகைகள் மட்டுமல்லாமல் சிலரின் வீடியோக்களை ஆபாசமாக எடிட் செய்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோக்கள் வைரலாகும் போது அதற்குரிய கண்டனங்கள் எழுவது இயல்பாகிவிட்டது. 

அது போலத்தான் தற்போது ராஷ்மிகா மந்தானா அரை நிர்வாண கோலத்தில் லிப்டில் இருந்து வெளியே வருவது போல உள்ள வீடியோ வெளிவந்துள்ளது. இதைப் பார்த்ததுமே இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். 


மேலும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக தற்போது களம் இறங்கி இருக்கிறார்கள். இது போன்ற வீடியோக்கள் வெளி வருவதை தடுக்க குறிப்பிட்ட சட்ட ஒழுங்கு நிலையை கொண்டு வர வேண்டும். இது போன்ற சைபர் குற்றங்களை தடுக்க முடியும். 

இந்த வீடியோவின் ஒரிஜினல் வீடியோவானது பிரிட்டிஷ் இந்திய பெண்ணான சாரா பட்டேலின் வீடியோவாகும். இவருக்கு 415 கே அளவு ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளார்கள். மேலும் இந்த வீடியோவானது அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று சாராவால் பதிவேற்றப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து பலரும் இந்த விஷயத்தைப் பற்றி டீவீட் செய்து பேசியிருக்கிறார்கள். அந்த வகையில் அமிதாப்பச்சனும் இது போன்ற குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.