வரிசை, வரிசையாக சின்னத்திரையில் சீரியல்கள் அணி வகுத்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பார்க்காத இல்லத்தரசிகளை இல்லை என்று கூறும் படி இந்த சீரியலின் ஆதிக்கம் படு பயங்கரமாக உள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டை தக்க வைக்க இந்த சீரியல் உதவுகிறது.
இந்த காரணத்தால் தான் திரைப்படங்களில் எப்படி இரண்டாவது பகுதி எடுக்கப்படுகிறதோ, அது போல அடுத்த சீசனும் பாண்டியன் ஸ்டோர்ஸில் கோலாகலமாக தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த தொடரில் குழலி எனும் கேரக்டரில் நடிக்கும் ஆர்.ஜே ஹாசினி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில வலி நிறைந்த அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருப்பது பலரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்களை போல இவருக்கும் ஏற்பட்டு உள்ளது. இவரின் இந்த கஷ்டத்துக்கு முக்கிய காரணமாக இவரது கணவர் இருந்திருக்கிறார்.
இவரது கணவர் பல பெண்களோடு தொடர்பு வைத்திருந்ததோடு, சில மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருப்பது திருமணத்திற்கு பிறகு தான் ஹாசினிக்கு தெரிய வந்தது. இருந்தாலும் காலம் கனியும் என்று காத்திருந்து கஷ்டங்களை பொறுத்து வாழ்ந்து வந்தார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாக வெடித்ததோடு இவருக்கு மன அழுத்தத்தையும் கொடுத்துள்ளது. இதற்கு காரணம் நடு ராத்திரி என்று கூட இல்லாமல் இரவு 2 மணிக்கு மேல் முகம் தெரியாதவர்கள் சிலர் வீட்டு கதவைத் தட்டி உங்கள் கணவருக்கு பிரச்சனை என்று கூறுவார்களாம்.
இதனை அடுத்து அந்தப் பிரச்சனையை சரி செய்து முடிப்பதற்குள், அடுத்ததாக இன்னொரு பிரச்சனை கிளம்பி விடுமாம். தன்னுடைய 29 வயதில் எதையெல்லாம் பார்க்கக்கூடாது, அனுபவிக்க கூடாது என்று நினைத்தாரோ அதையெல்லாம் பார்த்து அனுபவித்து விட்டதாக பேட்டி ஒன்று உருக்கமாக தனது கருத்தை கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து உச்சகட்ட மன அழுத்தத்திற்கு சென்ற ஹாசினி தன் கணவர் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்பதை உணர்ந்து கொண்டு திருமண வாழ்க்கை வேண்டாம் என்று அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். அதை தொடர்ந்து பல சங்கடங்களை சந்தித்த பிறகு நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
மக்களை மகிழ்விக்கும் குழலி கேரக்டருக்குள் இவ்வளவு சோகம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்த வண்ணம் பேசி வருகிறார்கள். மேலும் பிரபலமான பெண்ணிற்கே எத்தகைய கஷ்டமா? என்பதை அறிந்து கொண்டு பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.