சின்னத்திரை, பெரிய திரை என்ற வேறுபாடு இல்லாமல் இன்று மக்கள் இரண்டு திரையில் நடிக்க கூடிய கதாநாயகன் மற்றும் கதாநாயகியை ஒரே போல தான் கொண்டாடி வருகிறார்கள் என்று கூறலாம்.
அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் செலிபிரிட்டிசாக இருக்கக்கூடிய சில பிரபலங்கள் அவர்களின் தலை தீபாவளி கொண்டாட்டங்களை மிக நேர்த்தியான முறையில் கொண்டாடி உள்ளது.
அப்படி தலை தீபாவளியை கொண்டாடிய சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் அந்த ஜோடிகள் எப்படி தலை தீபாவளியை கொண்டாடினார்கள் என்பதை பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் காணலாம்.
தலை தீபாவளியை கொண்டாடிய பிரபலங்கள்
முதலில் தலை தீபாவளியை கொண்டாடிய பிரபலங்களின் வரிசையில் ரோஜா சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இன்றளவும் ரோஜா, ரோஜா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரியங்கா நல்காரி தனது தலை தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார்கள்.
இந்த பிரியங்கா நல்காரி மற்றும் ராகுல் வர்மா ஜோடிகள். இவர் மலேசிய தொழில் அதிபரை திடீரென்று மலேசியாவில் உள்ள கோவிலில் இரு வீட்டருக்கும் தெரியாமல் எளிமையான முறையில் திருமணத்தை செய்து கொண்டு தற்போது தலை தீபாவளியை குதூகலமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
இரண்டாவதாக நாஞ்சில் விஜயன் மற்றும் மரியா இவர்கள் இருவரும் தங்களது தலை தீபாவளியை அற்புதமாக கொண்டாடி இருக்கிறார்கள். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனார்கள். கடந்த டிசம்பர் மாதத்தில் நாஞ்சில் விஜயன், மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
மூன்றாவதாக பாரதி கண்ணம்மா அகிலன் மற்றும் அக்ஷயா பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் கேரக்டரில் நடித்ததின் மூலம் பிரபலமான நடிகராக மாறியவர் புஷ்பராஜ். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாதியில் வெளியேறினார் இப்போது சினிமாவில் கவனத்தை செலுத்தி வரும் இவர் செப்டம்பர் 14ஆம் தேதி தனது காதலியான அக்ஷயாவை திருமணம் செய்து கொண்டு தலை தீபாவளியை படு பிரமாதமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் தோழியாகவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அபி கேரக்டரில் நடித்த பிரபலமான நடிகை அன்பரசி தன் கணவன் வசந்தோடு தனது தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.
மேலும் ஷிமோனா, கிரண் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் அறிமுகமான இவர் விஜய் டிவியில் பாவம் கணேசன் சீரியலால் பிரபலமானார். கோவையை சேர்ந்த கிரண் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட இவர் தனது தலை தீபாவளியை சீரும் சிறப்புமாக கொண்டாடி இருக்கிறார்.
நீங்களும் உங்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் படித்து முடித்தவுடன் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வண்ணத் திரைக்கு உங்களது ஆதரவை கொடுங்கள்.