தமிழ் திரை உலகில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் அதிகளவு பணத்தை பெற்றுக் கொடுத்தது என கூறலாம்.
அதிக எதிர்பார்ப்போடு வெளி வந்த லியோ படம் ஓரளவு சக்சசைஸ் தந்து இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் இதை விட ஒரு மாஸான படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை.
இந்நிலையில் தற்போது சினிமா வாழ்க்கையில் மாஸ் காட்டி வரும் தளபதி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளாகி கிசு கிசுக்கள் எழுந்து வருகிறது.
அதுவும் லியோ படத்தில் திரிஷா உடன் லிப் லாக் காட்சியில் நெருங்கி நடித்த காரணத்தால் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் வலைதளங்களில் செய்திகள் பரவியது.
இந்த கிசுகிசுகளுக்கும், வதந்திகளுக்கும் முற்று புள்ளி வைக்கக் கூடிய வகையில் தளபதி விஜயின் மனைவி சங்கீதா ஒரு பேட்டியில் விஜய் பற்றி மிகவும் சிறப்பாக பேசி இருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் விஜய் பற்றி கூறும் போது தனக்கு முதல் முதலில் டைமண்ட் மோதிரத்தை கிப்டாக வாங்கி கொடுத்தார் என்ற விஷயத்தை பதிவு செய்து இருக்கிறார்.
அதுவும் நிச்சயதார்த்தம் முடிவதற்கு முன்பே அவர் அந்த கிப்டை வாங்கி கொடுத்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்தி கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தி விட்டது.
இது போலவே ஒவ்வொரு பிறந்தநாள் மற்றும் முக்கிய தினங்களிலும் விஜய் தனக்கு கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் தருவார் என சங்கீதா கூறி இருக்கக்கூடிய இந்த விஷயம் தான் சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து இதுவரை எழுந்து வந்த கிசுகிசுப்புகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இருப்பதாக விஜய் ரசிகர்கள் கூறி வருவதோடு மிகுந்த மகிழ்ச்சிகளும் இருக்கிறார்கள்.