பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தனக்கு என்று ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்ட நடிகர் கார்த்தி நடிப்பில் அண்மையில் தீபாவளி ரிலீஸ் ஆக வெளி வந்த ஜப்பான் திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை.
இதனை அடுத்து கட்டாயம் வெற்றியை தர வேண்டும் என்ற நிலையில் நடிகர் கார்த்தி இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவரது 27 வது படம் விரைவில் வெளி வரக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
நடிகர் கார்த்தியின் படத்தை பொறுத்த வரை அவருக்கு கொடுக்கக்கூடிய கேரக்டரில் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்க கூடியவர்.
இவரின் 27 ஆவது படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவரின் 27 ஆவது படத்தை நளன் குமாரசாமி இயக்க இந்தப் படத்திற்கு வா வாத்தியாரே என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஞானவேல் ராஜா இருக்கிறார். இந்த படத்தில் கார்த்தியோடு சத்தியராஜ் மற்றும் ஆனந்தராஜ் முக்கிய கேரக்டர்களை செய்யப் போகிறார்கள்.
இந்தப் படமானது ரொமான்ஸ்க்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என கூறலாம்.
காதல் உணர்வுகளை பக்குவமாக எடுத்த காட்டக் கூடிய விதத்தில் இதனை தத்துருவமாக இயக்குனர் பிரேம்குமார் எடுப்பார் என்பதில் அனைவரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தமிழ் ஆகியிருக்கிறார்.
கார்த்தியுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கும் அந்த ஜோடி அதுவும் சீரியல் நடிகை யார் என்று உங்களுக்கு தெரியுமா?
ஏற்கனவே இந்த சீரியல் நடிகை சில கன்னட படங்களில் நடித்து அறிமுகமானவர். தமிழில் ஈரமான ரோஜாவே சீசன் 2 பிரியா கேரக்டரில் நடித்து அசத்திய சுவாதி தான் கார்த்தியின் 27 ஆவது படத்தின் கதாநாயகியாக கமிட் ஆகியிருக்கிறார்.
குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்து விட்டு மாடர்ன் டிரஸ் உடன் உலா வர ஆரம்பித்திருக்கக் கூடியவர். இந்த படத்தில் கார்த்தியோடு மிகச் சிறப்பான முறையில் நடிப்பார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை கார்த்தியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சுவாதியின் சீரியல் ரசிகர்களும் பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து சீரியல் நடிகை சுவாதிக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர்களது நட்பு வட்டாரங்களும் இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாகி மேலும், மேலும் சுவாதிக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.