வயதில் மூத்த நடிகை மணக்க விரும்பிய மாதவன்..!! - யார் அந்த நடிகை-ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படத்தில் அட்டகாசமாக நடித்து பெண்களின் மனதில் சாக்லேட் பாயாக இடம் பிடித்த மாதவன் தனது அற்புத நடிப்பு திறனால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் சொந்தக்காரராக இருக்கிறார். 

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என தொடர்ந்து ரொமான்டிக் படங்களை தேர்வு செய்து நடித்து தனக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். 

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் இவர் அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். தமிழ் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பிற மொழிகளிலும் நடிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். 

எனவே தான் இவருக்கு பாலிவுட் திரை உலகில் ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்று கூறலாம். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக திரை உலகில் இருந்து சில காலம் விலகி இருந்த இவர் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார். 

இதனை அடுத்து தான் இவர் இறுதிச்சுற்று படத்தில் கம் பேக் கொடுத்தார். மேலும் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். 

மேலும் நம்பி எஃபக்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இவர் தன்னைவிட வயதில் மூத்த நடிகை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். இவரின் இந்த ஆசையை இவர் வெளிப்படையாக தன் தாயிடம் கூறி இருப்பது தான் ஆச்சரியமான விஷயம். 

இந்த நடிகை யார் தெரியுமா? இவர் கயாமத் சே கயாமத்தை பார்த்த பின்பு நான் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தன் அம்மாவிடம் கூறியதாக நடிகர் மாதவன் கூறிய விஷயம் தற்போது வைரலாக மாறிவிட்டது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.