திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட்கள் என்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்றாக உள்ளது என்பதை தற்போது ஊடகங்களில் வெளி வரும் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்றைய பதிவில் குழந்தை நட்சத்திரமாக இருந்த நடிகை ஒருவர் கதாநாயகியாக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
அப்போது இவருக்கு தெலுங்கில் ஒரு பிரபல நடிகர் நடிக்க கூடிய படத்தில் தங்கையாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
எனவே அந்தப் படத்தில் நடிப்பின் மூலம் தனக்கு கதாநாயகி அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நினைத்து அந்த படத்தில் கமிட்டான அந்த நடிகை படப்பிடிப்புக்காக தனது அம்மாவோடு படப்பிடிப்பு தளத்திற்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.
மறுநாள் தான் தனக்கு படப்பிடிப்பு உள்ளது என்பதை அவர் தெரிந்து கொண்டதற்கு பிறகு ஹோட்டலில் ரூமில் தங்கி இருக்கிறார். இதனை அடுத்து அந்தப் படத்தின் ஹீரோவையும் சந்தித்து இருக்கிறார்.
நாளை தனக்கு படப்பிடிப்பு உள்ளது என்ற கனவில் இருந்த அந்த நடிகைக்கு திடீர் என அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அந்த முன்னணி ஹீரோ.
இரவு 10 மணிக்கு பிறகு அந்த நடிகை தங்கி இருந்த ஹோட்டல் ரூம் கதவை தட்டி எழுப்பி இருக்கிறார்.
இதனை அடுத்து கதவைத் திறந்த உடன் ரூமுக்குள் வந்த ஹீரோ நடிகையின் தாயார் இருப்பதை பார்த்து சற்றே கோபத்தோடு தனது பார்வையை வீச, ஹீரோ ஏன் அங்கு வந்திருக்கிறார் என்பதை நடிகையின் தாயார் புரிந்து கொண்டார்.
இதனை அடுத்து அந்த நடிகரின் காலில் விழுந்து நடிகையின் தாய் கெஞ்சிக் கதறி அழுகிறார். அது மட்டுமல்லாமல் அந்த நடிகையும் எங்களை விட்டு விடுங்கள் என்று கதறி அழுதுதிருக்கிறார். மிக நீண்ட நேரமாக ஹீரோவின் கால்களை பிடித்துக் கொண்டு விடாமல் இருவரும் இதுபோல செய்து இருக்கிறார்கள்.
அடுத்து சில நிமிடங்கள் யோசித்த அந்த ஹீரோ நடிகையும், நடிகையின் தாயையும் பார்த்து ஓடிவிடுங்கள் என் கண் முன் நிற்கக்கூடாது. நாளை நான் உங்களை பார்க்கவே கூடாது என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டாராம்.
அப்படி ரூமில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு தன் காலை பிடித்து இருந்த அந்த நடிகையின் தாயை எட்டி உதைத்து விட்டு சென்று விட்டார். இதனை அடுத்து உடனடியாக அந்த இரவை அந்த நடிகையும், அவருடைய தாயாரும் சென்னை திரும்பி வந்து விட்டார்கள்.
இதுபோல திரை உலகில் அடுக்கடுக்காக நடிகைகளுக்கு இது போன்ற பல கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இதை பலரும் பல விதத்தில் வெளிப்படுத்தினாலும் தக்க ஆதாரம் இல்லாத காரணத்தால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி செல்கிறார்கள்.