ஆர்யா, சந்தானம் மற்றும் நடிகை ஹன்சிகா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளி வந்த சேட்டை என்ற திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரேம்ஜியின் முன்னாள் காதலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நக்ஷத்திரா நாகேஷ்.
இந்த கேரக்டர் ரோலை மிகவும் சிறப்பாக செய்ததின் காரணத்தால் இவருக்கு வாய் மூடி பேசவும், இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இந்த வாய்ப்புகளை இவர் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும் இவர் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளி வந்த சேனாமிக்கா என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் புகழை பெற்று தந்தது.
திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல், சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவு பங்கேற்ற நடிகையாகவும் சிறந்த தொகுப்பாளினியாகவும் திகழ்கிறார்.
இவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்களுக்கு சன்னி லியோனை பிடிக்குமா? அல்லது ஷகிலாவை பிடிக்குமா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இப்படிப்பட்ட கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத இவர் ஒரு சில மணி நேரங்கள் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்து பின் யோசித்து எனக்கு சன்னி லியோனை தான் மிகவும் பிடிக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்குக் காரணம் சன்னி லியோன் ஒரு நடிகை என்ற அந்தஸ்தை விட்டு அனைவருக்கும் உதவக் கூடியவர். பள்ளிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்து உதவி வருவதும், 300-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த மனது எளிதில் யாருக்கும் ஏற்படாது. அது மட்டுமல்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ உதவிகளை செய்து வருவதால் சன்னி லியோனை மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அனைவரும் இவருக்கு பாராட்டுகளை கூறி இருக்கிறார்கள். உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுங்கள்.