அடுக்கடுக்காய் நம்பிக்கை துரோகம் தோழி முதல் மகள் வரை..! - புலம்பும் மஞ்சு வாரியார்..!

 

நடிகை மஞ்சு வாரியார் தல அஜித்தின் துணிவு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகை அசத்தியவர் சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக இருக்கக்கூடியவர்.இவரின் வாழ்க்கையில் சோகங்கள் நிறைந்துள்ளது என கூறலாம். 

இவர் 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட இருவரும் 17 ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் மீனாட்சி. 

சீரும் சிறப்புமாக இவர்களது மண வாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் புயல் போல இவர்கள் வாழ்க்கையை அழிக்க காவ்யா மாதவன் உள்ளே நுழைந்தார். இவரும் நடிகை தான் இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த காசி திரைப்படத்தில் நடித்திருப்பார். 

மஞ்சு வாரியரும் காவ்யா மாதவனும் மிகச்சிறந்த நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். எனினும் காவ்யா பட வாய்ப்புக்காக தீலீப்போடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்ட காரணத்தால் தீலீப்புக்கும், இவருக்கும் இடையே கசமுசா என கிசுகிசுக்கள் எழுந்தது. 

அதை உறுதி செய்யும் விதமாக காவ்யா மாதவனை தொடர்ந்து காதலிக்க குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. தான் நம்பிய உற்ற தோழியே தன் கணவரோடு இருப்பதை நினைத்து வருந்திய மஞ்சுவாரியார் 2017 ஆம் ஆண்டு தீலீப்பிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். 

இதனை அடுத்து தனக்கு சக்காளத்தியாக வந்த காவ்யா மாதவனை நினைத்து தினம் தினம் வேதனை படக்கூடிய மஞ்சுவாரியார் தன்னுடைய பெண்ணை தன் பராமரிப்பில் வைத்து வளர்த்து வந்து வேளையில், தற்போது கோர்ட்டில் மஞ்சுவாரியாரின் மகள் தன் தந்தையிடம் வளர விருப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறார். 

இந்த நிகழ்வானது பட்ட புண்ணில் பட்டு, கெட்ட குடியே கெடும் என்று கூறுவது போல் தன்னை நம்பிய அனைவரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்ற நிலைக்கு மஞ்சுவாரியாரை கொண்டு சென்றுள்ளது. 

இதை அடுத்து தன்னை விட்டு பிரிந்து வாழும் மகளை அடிக்கடி சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் என்ற செய்தியை விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகிறது. இது போல அவல நிலை எந்த பெண்களுக்கும் ஏற்படக் கூடாது.