ப்ரா பற்றிய கேள்வி.. கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பதில் சொன்ன பிரியா பவானி சங்கர்..!! - சூப்பரான பதிலடி..!

 

தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் பிரியா பவானி சங்கர். இவர் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். 

இதனை அடுத்து சீரியல் களில் நடிக்க ஆரம்பித்த இவர் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். 

எப்போதும் ரசிகர்களோடு கலந்துரையாடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இவர் அண்மையில் ரசிகர் அவர்களோடு கலந்து உரையாடி இருக்கிறார். அப்போது இணையவாசி ஒருவர் அவருடைய ப்ரா சைஸ் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். 

சற்றும்  எதிர்பார்க்காத கேள்வியை கேட்டதை அடுத்து பிரியா பவானி சங்கர் கடுப்பாகிவிட்டார். எனினும் இணையவாசியை கடுமையாக திட்டி அதற்கான தக்க பதிலையும் கொடுத்துவிட்டார். பொதுவாக இப்படிப்பட்ட கேள்விகளை நடிகைகளின் மத்தியில் கேட்டிருந்தால் அவர்கள் இத்தகைய பதில்களை தந்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். 

ஆனால் ஆரம்ப நாட்களில் இருந்து மீடியாக்களில் பணி புரிந்த அனுபவம் இருந்ததன் காரணத்தால் பிரியா பவானி சங்கர் நேர்த்தியாக பதில் அளித்து இருக்கிறார். மேலும் அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருந்தால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி அதை வைரலாக மாற்றி இருப்பார்கள் என்பது அவருக்கு மிக நன்றாக தெரிந்துள்ளது. 

எனவே தான் இதற்கான பதிலை துணிந்து கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு நபருக்கு தான் முதலில் எதிர்வினையை ஆற்ற வேண்டும். எனக்காக நானே பேச தயங்கினால் வேறு யார் பேசுவார்கள் என்ற விவாதத்தையும் முன் வைத்து விட்டார். 

நான் ஒரு மிகப்பெரிய நடிகை என்று எண்ணாமல் தனி மனிதனாக என் மீது இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பும் போது எனக்கு கோபம் வரத்தான் செய்யும். அதற்குரிய எதிர்வினையை தான் தற்போது நான் கொடுத்துள்ளேன். இது எனக்காக நான் கொடுத்துக் கொண்ட குரல் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

இதனை அடுத்து பிரியா பவானி சங்கரை அனைவரும் பாராட்டி வருவதோடு துணிந்து இது போல் பெண்கள் நிற்பதால் பலவிதமான நக்கல் மற்றும் கேலிகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதோடு பலருக்கும் உதாரணமாக இருக்கலாம் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.