தொகுப்பாளரை பங்கம் செய்த வனிதா..!! - தாளிக்கும் நெட்டிசன்கள்..!

 

பிக் பாஸ் 7 சீசனை மிகச் சிறப்பாக தனியார் Youtube சேனல்களுக்கு ரிவ்யூ செய்து கல்லா கட்டி வரும் வனிதா விஜயகுமார், தன் மகள் அந்த சீசனில் கலந்து கொண்டு இருந்தாலும் அவரை டச் செய்யாமலேயே பேசி வருவதோடு இதன் மூலம் பெறும் அளவு பணமும் பார்க்கிறார். 

வனிதா விஜயகுமார் ரிவ்யூ செய்வதை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம். இவர் ரிவ்யூ செய்யும் போது தன் மகளைப் பற்றி அதிகமாக பேசியதே இல்லை. 

எனினும் அவர் விசித்ராவிடம் கத்தி பேசியது பற்றி ஒரு சில அபிப்ராயங்களை தெரிவித்து, அந்த இடத்தில் ஜோவிகா தன் பெயரை டேமேஜ் செய்து கொள்வதை தான் விரும்பவில்லை. அது எனக்கு பிடிக்கவில்லை என்ற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார். 

மேலும் வழக்கம் போல வனிதா அந்த தனியார் Youtube சேனலுக்கு ரிவ்யூ செய்து வரும்போது தொகுப்பாளர் சாதாரணமான முறையில் கேட்ட கேள்வியை குதர்க்கமாக புரிந்து கொண்டு பதில் அளித்து இருக்கிறார். 

இதனை ஒருவாறு சமாளித்து சிரிப்பை வெளிப்படுத்திய தொகுப்பாளரிடம் நீ சிரித்துக்கொண்டே சமாளிக்க இது உன் ஷோ இல்லை. நீ ஏன் எப்போ சிரிக்கிற எனக் கேட்டது மட்டும் இன்றி, நீ சிரிப்பது விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் நக்கலாக பார்ப்பாரே.. அப்ப எப்படி கடுப்பாகுமோ.. அது போல தான் எனக்கும் உள்ளது என்று கூறுகிறார். 

 மேலும் அந்தத் தொகுப்பாளரை இந்த பிரேமில் இருந்து தூக்க வேண்டும் என்று அவர் கூறியதோடு மட்டுமல்லாமல் அவர் வெளியேறிய பின்னரே தன்னுடைய ரிவ்யூவை துவங்கி இருக்கிறார். 

இதனை அடுத்து வனிதாவின் இந்த அக்ரசிவ் பேச்சால் இணையம் அதிர்ந்து விட்டது என கூறலாம். இந்த பேச்சை கேட்டிருக்கும் நெட்டிசன்கள் இப்பவே இப்படி என்றால் இவர் பெண் பற்றி சொல்லவா? வேண்டும் என்று தாளித்து இருக்கிறார்கள். 

மேலும் அநாகரீகமாக நடந்து கொண்ட இவருக்கு தப்பாத பெண் தான் ஜோவிகா என்று பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இதை தான் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று கூறுகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.