பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2 படங்களில் தனது திறமையை நிரூபித்து ஜாம்பவான் இயக்குனர் என்ற இடத்தில் இருக்கும் மணிரத்தினம் பற்றி தயாரிப்பாளர் ஒருவர் கழுவி ஊற்றி இருக்கிறார்.
ஸ்ரீரங்கத்து தேவதைகள், அலை ஓசை, வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான மாணிக்க நாராயணன் தயாரிப்பாளராக திகழ்ந்திருக்கிறார்.
இவர் கூலி, மாண்புமிகு மாணவன்,சீனு போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
இவர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். இந்த பேட்டியில் சினிமா என்பது ஒரு மிகப்பெரிய கடல் என்றும் அதில் மூழ்கி முத்து எடுப்பது என்பது மிகப்பெரிய விஷயம் என்பதை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த படங்களில் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுமே தவிர ஜெய்ப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.
ரோஜா பூவாக நினைக்கும் சினிமாவில் தான் எண்ணற்ற முள்ளும் உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் எடுக்கும் படத்தில் கதை நன்றாக இருந்தாலும் படம் ஓடாது, தெரியாத முகமாக இருந்தாலும் படம் ஓடாது.
எனவே உங்கள் படம் சிறப்பாக ஓட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் அதில் நடித்திருக்க வேண்டும்.
அப்படி நடித்தால் தான் அந்த படம் ஓடும் என்பதை நான் அடிபட்டு தெரிந்து கொண்டேன்.
பட விஷயத்தை பொறுத்த வரை விஜயை வைத்து நான் படம் எடுத்திருக்கிறேன். இப்போதும் எனக்கு விஜயின் மேல் மரியாதை உண்டு.
ஆனால் இன்று நிலைமையே வேறு. அஜித்திடம் சென்று தேதி வேண்டும் என்று யாராலும் பிச்சை எடுக்க முடியாது. அஜித்தை விட விஜய் ஒரு படி மேல் என்று நான் கூறுவேன்.
இப்படி பேசிய அவர் மணிரத்தினத்தைப் பற்றி பேசும் போது மணிரத்தினம் என் பெயரை காலி செய்து, என் வாழ்க்கையை சாகடித்து விட்டார்.இவரால் தான் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது என்றார்.
அவரிடம் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பணம் இருக்கும் போது எனக்கு கொடுத்து உதவி செய்திருக்கலாம். அதை மணிரத்தினம் செய்யவில்லை.
எனவே என்னை பொருத்தவரை மணிரத்தினம் ஒரு மனுஷன் இல்லை. எல்லோருக்கும் தான் காசு தேவை அதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள்.
ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் 1 பாகத்தை நான் ரிலீஸ் செய்வதாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்று மணிரத்தினம் பற்றிய பல விஷயங்களை வேதனையோடு போட்டு உடைத்தார்.
இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மணிரத்தினம் இப்படிப்பட்டவரா? என்ற எண்ணத்தையும் பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.