"என் பலம்.. என் வீக்னெஸ்.. என் உலகம் இதுதான்..!" - லைக்ஸ் அள்ளும் குஷ்பூ வெளியிட்ட போட்டோஸ்..!

 

90-களில் பல முன்னணி தமிழ் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த குஷ்பூ ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். பிரபு உடன் இணைந்து சின்னத்தம்பி படத்தில் நடித்ததில் காரணத்தால் பெருவாரியான தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

ஆரம்ப நாட்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி மொழியில் அறிமுகமான பிறகு 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு போன்ற பழமொழிகளில் நடித்து தனது ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். முறைமாமன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தை இயக்கிய சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். வளர்ந்த நிலையில் தற்போது இந்த இரண்டு பெண்களுமே தங்களது படிப்பை முடித்துவிட்டு திரை துறையில் கால் பதிக்க தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா விரைவில் ஹீரோயினியாக அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுபோலவே இவரது இரண்டாவது மகளான அனந்திடா கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணிகள் உருவாகும் கமலஹாசன் 234 படத்தில் தனது தந்தையைப் போல துணை இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். 


இந்த சூழ்நிலையில் குஷ்பூ எப்போதும் வலைத்தள பக்கங்களில் படு பிஸியாக இருப்பார். அந்த வகையில் தற்போது கணவன் மனைவி குழந்தைகளோடு இருக்கின்ற ஃபேமிலி புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தில் என்னுடைய பலம், என்னுடைய பலவீனம், என்னுடைய உலகம் இவர்கள் தான்.. என்ற கேப்சனை போட்டு புகைப்படத்தை பகிர்ந்த இவருக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. 

நீங்களும் இந்த குடும்ப புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கும் பிடித்துப் போகும். நீங்களும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை மறக்காமல் கொடுப்பீர்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள். உங்களது நண்பர்களுக்கும் எந்த பக்கத்தை ஷேர் செய்யுங்கள்.