வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வயது என் பெண்ணிற்கு என்று கூறுவது போல தற்போது தன் மகளுக்காக வக்காலத்து வாங்கிப் பேசி வரும் வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகாவின் செயல்கள் அருவருக்கத் தக்க வகையில் தான் உள்ளது.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியிருக்கும் வனிதாவின் மகள் ஜோவிகாவின் அத்து மீறிய அலப்பறைகள் பிக் பாஸ் வீட்டை ரணகளப்படுத்தி விட்டது என கூறலாம்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என பிற மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்பவர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதால் சினிமாவில் நடிக்க விரும்பக்கூடிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
இதனை அடுத்து வனிதாவின் மகள் ஜோவிகா இந்த சீசனில் கலந்து கொண்டு அவரது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த சீசனை வெல்வதற்காக வனிதா விஜயகுமார் வெளியே இருந்து ஏகப்பட்ட வேலைகளை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஜோவிகா தமிழில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பிக் பாஸ் பிரபலம் என்கிற பெயரோடு சினிமாவுக்குள் நுழைந்தால் நல்ல நிலையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்.
அந்த வகையில் முதல் வாரத்திலேயே இவர் வாய் திறந்து பேசிய உடனே இவருக்கு என்று ஆர்மி எல்லாம் ஆரம்பித்த ரசிகர்கள் தற்போது இவரை உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் ஜோவிகா தன்னை விட வயதில் மூத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் வாய்க்கு வந்தபடி பேசி வாயாடி என் மகள் என்பதை ப்ரூப் செய்து விட்டதோடு அவரது அதிக பிரசிங்கித்தனமான பேச்சுக்களால் வீட்டில் சர்ச்சைகள் வெடித்து விட்டது.
இதனை அடுத்து இவர் மகள் மிகவும் சிறந்தவள் என் பெண்ணுக்கு அப்படியெல்லாம் பேச வராது என்று வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு பிக் பாஸ் வீட்டை விட வெளி உலகில் தான் விஷம் நிறைந்து இருப்பதாக பதிவிட்டிருக்கக் கூடிய பதிவு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.