நீங்களுமா இப்படி? பாவம் ஐஸ்வர்யா..! - அபிஷேக் பச்சன் செயலால் கொதிக்கும் ரசிகர்கள்..!..

 


எவ்வளவுதான் சுதந்திரம் பெற்று இருந்தாலும் இன்னும் பெண்கள் விஷயத்தில் நாம் உரிய உச்சகட்ட சுதந்திரத்தை அடைந்திருக்கிறோமா? என்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் மிகச் சிறந்த நடிகரான அபிஷேக் பச்சன் செயல் அமைந்துள்ளது என ரசிகர்கள் கலவை ரீதியான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள். 

உலக அழகியான ஐஸ்வர்யாராயை அபிஷேக் பச்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டின் மருமகளாக மாறியவர், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 

 உலக அழகியும், அபிஷேக் பச்சனும் சிறப்பான முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று ரசிகர்கள் கருதி வந்தாலும், நிறைய நிகழ்வுகளில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்த கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கிறார். 

இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் பல வீடியோக்களில் ஐஸ்வர்யா ராய் அழுதபடி வெளியேறுவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். மேலும் இந்த வீடியோக்கள் வைரலாகி உள்ளது. சாதாரண நடிகராக இருக்கும் அபிஷேக் பச்சனுக்கு தன் மனைவி உலக அழகி என்ற புகழ் கண்ணை உறுத்தும் படி உள்ளது என பல மீடியாக்கள் பேசி உள்ளது. 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் சில நாட்களுக்கு முன்பு அவரது ஐம்பதாவது பிறந்த நாள் விழாவை கொண்டாடி இருக்கிறார். இந்த விழாவில் தனது மகள் மற்றும் அம்மாவோடு கொண்டாடி இருக்கிறார். 


இந்த நாளில் இவரது ஏராளமான ரசிகர்கள் இவருக்கு பல்வகையான வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவரது கணவரான அபிஷேக் பச்சன் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலர் மத்தியிலும் பரவலாக இருந்தது. ஆனால் அபிஷேக் பச்சனோ பிளாக் அண்ட் வொயிட் போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தினை படு எளிமையாக யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கூறிவிட்டார். 

இதை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் அனைவரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தன் மனைவிக்கு இரண்டு வார்த்தைகளில் ஏதாவது எழுதி இருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தினை முன் வைத்து இருக்கிறார்கள். 

இன்னும் சில ரசிகர்கள் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏதேனும் இருக்கலாம். அதை உறுதி செய்யக்கூடிய வகையில் எந்த பகிர்வு உள்ளது என்று கூறியதோடு ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராய்க்காக எதையும் செய்ய துணிந்த ஒரு கூட்டம் இருந்தது என்றும் கூறியிருக்கிறார்கள். 

மேலும் சில ரசிகர்கள் உலக அழகி என்றால் கூட கணவன் வீட்டில் கணவன் கொடுக்கும் மரியாதை எவ்வளவு தான் என அப்பட்டமாக பேசி இருக்கிறார்கள். அழகியாக இருந்தாலும் இவரது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று சில ரசிகர்கள் வருத்தத்தோடு இருக்கிறார்கள்.