வனிதா முகத்தில் நலங்கு வைத்த பிக்பாஸ் ரசிகர்..! - கொடூரமாக வீங்கிய முகம்..! - என்ன நடந்தது..?

 

பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார் பங்கேற்றது அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். அன்று இவரின் மூலம் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த அலப்பறைகளை யாரும் மறக்க முடியாது. 

இதனை அடுத்து தற்போது இவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு தன் அம்மாவைப் போல அனைத்து போட்டியாளர்களையும் திணறடித்து வருகிறார். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி நடிகை வனிதா பிரபல Youtube சேனலுக்காக ரிவ்யூ செய்து வருகிறார். இந்த ரீதியில் அன்றாட நடக்கக்கூடிய நிகழ்வுகளைப் பற்றி அவர் அலசி ஆராய்ந்து பேசி வருகிறார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரதீப் ரெக்கார்ட் விவகாரம் தெரிந்த அளவு பேசப்பட்டது இதைப்பற்றி கூறும் போது ரெக்கார்ட் கொடுத்தது சரிதான் என்று பிரதீப்புக்கு எதிரான வாதத்தை வனிதா முன் வைத்தார் இதனால் பிரதீப்பின் ரசிகர்கள் கடும் கோபம் ஒற்று எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்கள். 


இந்த நிகழ்வுகள் நடந்து ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் நடிகை வனிதா விஜயகுமாரை நள்ளிரவு நேரத்தில் சிலர் தாக்கி இருக்கிறார்கள். பிரதீப் ரசிகர்கள் தான் தன்னை தாக்கி விட்டதாக கூறியிருக்கும் வனிதா விஜயகுமார் அது பற்றி தனது எக்ஸ் தளத்தில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது. 

அன்று ரிவ்யூவை முடித்துவிட்டு தன்னுடைய தங்கை சௌமியா வீட்டு இரவில் உணவு சாப்பிட்டுவிட்டு காரை எடுக்க பார்க்கிங் வந்தபோது திடீரென்று ஒரு நபர் குறுக்கே பாய்ந்து ரெட் கொடுக்குறீங்களா.. நீங்க சப்போர்ட்டா என்று கேட்டு முகத்தில் ஓங்கி குத்தி தப்பிவிட்டான். 

இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரவலாக பரவி வருகிறது. இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்.