சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இதனை அடுத்து தற்போது அவர் இயக்கிய படம் தான் லால் சலாம்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தது.
ஏற்கனவே ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் பெருவாரியான வெற்றியை ரஜினிக்கு தந்துள்ள நிலையில் தன்னை வைத்து மகள் இயக்கிய இந்த படம் எப்படி மக்கள் மத்தியில் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பில் ரஜினி மட்டுமல்லாமல் அனைவரும் காத்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்கராத் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமான இந்த தகவலால் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்தது.
எனினும் தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளிவருமா? என்பதில் சற்று குழப்பமான சூழ்நிலையை நிலவுகிறது என கூறலாம்.
இதற்கு காரணம் மீண்டும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை சேர்க்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நினைப்பதாலும், ரஜினி நடித்த சில காட்சிகளின் ஃபுட்டேஜ் டெலிட் ஆகிவிட்டதாலும் அதை மீண்டும் படத்தில் சேர்க்க வேண்டும் என்று இயக்குனர் நினைப்பதால் இந்த படம் வெளிவருவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது.
எனவே திடீர் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த இந்த முடிவால் படம் பொங்கலுக்கு வெளிவருமா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. இதற்காக உரிய பதிலை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விரைவில் கூறுவார் என சொல்லலாம்.
ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பிசியாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் மீண்டும் இரண்டு பாடல்கள் இணைப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
எனவே இந்த சூழ்நிலையை உணர்ந்து ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாமை தருவாரா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.