சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்டுகளுக்கு பஞ்சம் இல்லை. இந்த மாயா ஜால உலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு ஏற்படக்கூடிய வன்கொடுமைகளை எளிதில் எவராலும் எடுத்துச் சொல்ல முடியாது.
அந்த வகையில் திரைத்துறையில் ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தப் பிரச்சனைகள் அரங்கேறி உள்ளது.
அதனைப் பற்றிய பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பாரதிராஜா டைரக்டர் ஆக இருந்த சமயத்தில் சமகாலத்தில் பணியாற்றிய டைரக்டர் மிகவும் கோபக்காரர். இவரது படத்தில் ஒரு நடிகை நடிக்கிறார். அந்த நடிகை சரியாக நடிக்காத காரணத்தால் கோபத்தால் திட்டி விடுகிறார்.
இதனை அடுத்து அந்த நடிகையின் மீது டைரக்டருக்கு சபலம் வந்து விடுகிறது. மாலை நேரமானால் அந்த நடிகையை கொஞ்ச ஆரம்பித்து விடுவார். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் தனது விருப்பத்தை நேரடியாக தெரிவிக்க அதற்கு அந்த நடிகை மறுத்து விடுகிறார்.
அது மட்டுமல்லாமல் ஒரு லிமிட்டை தாண்டினால் சினிமாவே வேண்டாம் என்ற நிலைக்கு அந்த நடிகை உறுதியாக இருந்த நிலையில் டைரக்டருக்கு இது மேலும் ஆத்திரத்தை மூட்டியது. எப்படியாவது அந்த நடிகையை தன் வழிக்கி கொண்டு வர வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை செய்கிறார்.
எதற்கும் அந்த நடிகை மசியாத காரணத்தால் ஒரு காட்சிகள் வண்டி ஓட்டி வரவேண்டும். அந்த நடிகைக்கு வண்டி ஓட்ட தெரியாது. எனினும் நீ பழகி அந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறார்.
அந்த நடிகையின் தன் சொந்த ஊருக்கு சென்று மொபட்டை வாங்கி கற்றுக் கொள்கிறார்.
சூட்டிங் நடக்கும் சமயத்தில் ஊர் மக்கள் வேடிக்கை பார்க்க கூடிய சமயத்தில் மொபட்டை ஓட்டுகிறார்.
இந்தப் படப்பிடிப்பானது கும்பகோணம், தஞ்சை பகுதிகளில் நடந்தது. அப்போது காவிரி ஆற்றின் கீழ் டிவிஎஸ் 50 ஓட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
நடிகையோ என்னால் முடியாது என்று கூற, டைரக்டரோ விடாமல் நீ தான் செய்து ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள். மொத்த யூனிட்டுமே அந்த பெண்ணிற்காக இரக்கப்பட்டு பேசினார்கள்.
எனினும் டைரக்டரின் பிடிவாதத்தால் வேறு வழியில்லாமல் அந்தப் பெண் வண்டியை கீழே இறக்க தலை கீழாக விழுந்து உருண்டு உடலெல்லாம் பயங்கர காயங்கள் ஏற்பட்டது.
இதனை எடுத்து அந்த ஊர்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டைரக்டரை அடிக்கச் சென்று விட்டார்கள்.
இதனை அடுத்து அந்த பெண் நடிகை வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அதனை அடுத்து வேறொரு பெண்ணை போட்டு அந்த படத்தை எடுத்து விட்டார்கள்.
தான் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக டைரக்டர் செய்த விஷமத்தனம் மற்றும் கொடூர புக்தி இன்று இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.