தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீ திவ்யா 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சிவகார்த்திகேயனோடு நடித்த இவர் ஊதா கலரு ரிப்பன் பாடலில் போட்ட ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர்களின் மனதில் ஆழமான இடத்தை தந்துவிட்டார்கள்.
இதன் பிறகு இவர் எதிர்பார்த்தபடி பல தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் இவர் ஜீவா உடன் வெள்ளைக்கார துரை மற்றும் ஈட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.
இதன் இடையில் தற்போது ஸ்ரீ திவ்யா பற்றி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளி வந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இடையில் அவருக்கு ஏன் ஒரு மிகப்பெரிய திரை படத்தில் நடிக்க மிக இடைவெளி ஏற்பட்டதற்கான காரணமும் அதுவாக இருக்குமோ? என்று கருதக்கூடிய வகையில் அந்த தகவல் உள்ளது.
இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் போது ஸ்ரீ திவ்யாவை வாரிசு நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்திருக்கிறார், ஆனால் அதற்கு விருப்பப்படாத ஸ்ரீதிவ்யா அதை மறுத்துவிட்டார் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
தனது ஆசைக்கு இணங்க மறுத்த ஸ்ரீதிவ்யாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத படி அந்த வாரிசு நடிகர் பொய்யான தகவல்களை பரப்பி ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை காலி செய்து விட்டார். இந்த காரணத்தால் தான் ஸ்ரீதிவ்யாவுக்கு சுத்தமாகவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
எனவே தான் பல ஆண்டுகள் திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த ஸ்ரீ திவ்யா தற்போது விக்ரம் பிரபுவின் ரைட் படத்தில் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார்.
இதன் மூலம் ஸ்ரீதிவ்யா ஏன் எத்தனை ஆண்டுகள் திரைப்படத்தில் நடிக்காமல் இருந்தார் என்ற காரணம் உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும்.
இந்த இரண்டு அரை ஆண்டு காலத்திற்கு அவர் நடித்திருந்தால் நிச்சயமாக முன்னணி கதாநாயகியின் வரிசையை எட்டி பிடித்திருப்பார்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் எங்கு தான் போட்டியில்லை, பொறாமையில்லை.
இவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்க வேண்டாம். எனினும் இரண்டாம் இன்னிங்ஸில் தக்க இடத்தை பிடித்து வெற்றிவாகை சூடுவர் என்று அவருக்கு பக்கபலமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.