ரஜினியின் நான்கு படங்களுக்கு நோ சொன்ன உலக அழகி..! - காரணம் தெரியுமா..?


பொதுவாகவே ரஜினியின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா நடிகைகளுக்குமே இருக்கும். ஆனால் ரஜினி நடித்த படங்களில் வாய்ப்பு கிடைக்கும் நான்கு படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பை தவறவிட்டார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

இவருக்கு படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரை நடிக்க சொன்னார்கள். அந்த கேரக்டர் நெகட்டிவ் கேரக்டர் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டார். மேலும் சௌந்தர்யா கேரக்டர் ரொம்ப சாப்டான கேரக்டராக தெரிவதால் தனக்கு செட்டாகாது என்று கூறி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து பாபா படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிக்கக்கூடிய சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தது. அதில் ரஜினியின் காதலி சாமுண்டீஸ்வரி கேரக்டருக்கு கேட்ட போது பணத்துக்காக காதலை வேண்டாம் என்று மறுக்கும் கேரக்டர் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அந்த வாய்ப்பையும் நிராகரித்தார். இதனை அடுத்து மணிஷா கொய்ராலா இந்த கேரக்டரை செய்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். 

விடாகொண்டன், கொடாக்கண்டன் கதையாக சந்திரமுகி திரைப்படத்தில் நயன்தாரா கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருப்பார். எனவே அவரை நடிக்க வைக்கலாம் என்று ரஜினியே சொல்ல இந்த கேரக்டர் பெரிதாக முக்கியத்துவம் இல்லாதது போல் இருப்பதால் வேறு ஒரு படம் பண்ணும் போது நல்ல கேரக்டர் இருந்தால் நடிக்கிறேன் என்று நழுவி விட்டார். 

இதனை அடுத்து சிவாஜி படத்தில் ஸ்ரேயா கேரக்டருக்கு கதை சொல்லி இருக்கிறார்கள். இந்த முறை நீங்கள் எதிர்பார்த்த எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது என்று ரஜினியும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு ஐஸ்வர்யா ராய் எல்லாமே சரிதான் தற்போது ஆங்கில படத்தில் நடிப்பதற்கான கால்சிட்டையை கொடுத்து விட்டேன். 

அதனால் என்னால் சிவாஜி படத்தில் நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனை அடுத்து ரஜினி நடிப்பில் வெளி வந்த எந்திரன் படத்தில் சனா என்ற கேரக்டரில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ரஜினியோடு இணைந்து நடித்தார். மேலும் உலக அழகியோடு நடிக்க வேண்டும் என்ற ரஜினியின் ஆசையும் இந்த படத்தின் மூலம் நிறைவேறியது.