தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர்தான் தளபதி விஜய். இவருக்கு என்று அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீப காலமாகவே தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையே ஆன உறவு நிலை சுமூகமாக இல்லை என்பது போன்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.
அதற்கு ஏற்பது போலவே அண்மையில் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ படத்தின் வெற்றி விழாவிற்கும் அவரது மனைவி சங்கீதா வரவில்லை.
இந்த வெற்றி விழாவானது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் படு பிரம்மாண்டமான முறையில் நடந்தது.
இதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் என பல முக்கிய முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். எனினும் விஜயின் மனைவி சங்கீதா இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதற்கான காரணத்தை நடிகர் மற்றும் பயில்வான் ரங்கசாமி கூறியிருக்கிறார்.
ஏற்கனவே வாரிசு திரைப்பட வெற்றி விழாவிலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மீண்டும் திரிஷா லியோ படத்தில் விஜயோடு நடித்திருப்பது சங்கீதாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏற்கனவே இவர்கள் இருவரிடையே காணப்பட்ட பிரச்சனை இதனை அடுத்து முத்தி உள்ளது.
அந்த வகையில் பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் மற்றும் திரிஷா ஜோடி இனி தொடர்ந்து ஒன்றாக நடிக்க கூடாது என்ற கண்டிஷனை மறந்து மீண்டும் இணைந்ததை அடுத்து தளபதி வீட்டில் பிரச்சனை பெரிதாகி உள்ளது என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் லியோ படத்தில் லிப் லாக் காட்சியில் இருவரும் மிக நேர்த்தியான முறையில் அவர்கள் ரொமான்ஸை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் இருந்ததால் அதிகளவு கடுப்பில் சங்கீதா இருப்பதாகவும் இந்த காரணத்தினால் தான் அவர் சக்சஸ் மீட்டிக்கு வரவில்லை என்று கொளுத்திவிட்டார்.
இது போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இருவரும் ஒன்றாக இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டாலே இந்த சர்ச்சைகள் அடங்கிப் போய்விடும் என கூறலாம்.