ஜோவிக்கு அம்மா அனுப்பிய டீ சார்ட் மெசேஜ்..!! - பதறிப் போன பிக் பாஸ் வீடு..!

 

ஆண்டவர் தொகுத்து வழங்கி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கும்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகப்பட்டு மக்கள் விரும்பக்கூடிய ஒரு ரியாலிட்டி ஷோவாக உள்ளது. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் விருப்பம் கொள்வதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேரும் என்பதால் நடிகர்கள் இந்நிகழ்ச்சியின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இதனை அடுத்து ஜோவிகாவிற்கு வனிதா ஒரு டி-ஷர்ட் அனுப்பி இருக்கிறார். 

இந்த டி-ஷர்ட்டுக்குள் தான் ஒரு முக்கியமான தகவல் உள்ளது. அவர் அனுப்பி வைத்துள்ள டீ ஷர்ட்டில் சிங்கம் ஆல் வேஸ் சிங்கிள் என்ற கருத்தினை உணர்த்தக் கூடிய வகையில் பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்டை தான் அனுப்பி இருக்கிறார். 

இதை பார்த்து தனியாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று மகளுக்கு தாய் நம்பிக்கையை தந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா அந்த டி-ஷர்ட் அணிந்து கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் விரும்பினால் அந்த வீடியோவை எங்கள் பக்கத்தில் பார்த்து மகிழலாம்.