"படுக்கையறை காட்சி..” - கூச்சமில்லாமல் பேசிய வாணி போஜன்..!" - அதுக்கு பணம் முக்கியம் இல்லையாம்..!

 

சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசைபயிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு எந்த நடிகைகளுக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்ததில்லை. எனினும் சின்ன திரையில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய வாணி போஜனை அனைவரும் அன்போடு சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பார்கள். 

இதனை அடுத்து இவருக்கு பெரிய திரையில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. பெரிய திரையில் ஆரம்பத்தில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த, இவர் தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளி வந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். 

இதனை அடுத்து நடிகர் ஜெய் உடன் கிசுகிசுக்கப்பட்ட இவர் பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அண்மையில் இவர் தந்திருக்கும் பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பார்க்கப்படுவதோடு, பேசும் பொருளாக மாறிவிட்டது என கூறலாம். 

இதற்கு காரணம் பேட்டியின் போது பேட்டி எடுக்கும் நபர் இவரிடம் கேட்ட கேள்வி ஆனது திரைப்படங்களில் கதைக்கு தேவை இல்லாமல் படுக்கையறை காட்சிகள் வைக்கப்படுகிறதா? என்பது தான். இந்தக் கேள்விக்கு பதில் அளித்த வாணி போஜன் தான் செங்கலம் என்ற திரைப்படத்தில் நடித்த போது நடந்த சம்பவத்தை உதாரணமாக கூறியிருக்கிறார். 

மேலும் இந்தப் படம் பற்றிய கதையை சொல்லும்போது இதில் படுக்கை அறை காட்சி இருப்பதை கூறாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அது போன்று ஒரு காட்சி இருப்பதை கூறினார்கள். அதுமட்டுமல்லாமல் நான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடம் இந்த கதைக்கும் படுக்கை அறை காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

எதற்காக மசாலாவாக இதை சேர்க்க வேண்டும் என்று கேட்க அவர்கள் அந்த காட்சியை கைவிட்டு ஷூட்டிங் எடுத்து முடித்தார்கள். என்னைப் பொறுத்தவரை படத்திற்கும், கதைக்கும் தேவை என்றால் தான் அது போன்ற காட்சிகள் இடம் பெற வேண்டும், தேவை இல்லாமல் இடம் பெறுவது அனாவசியம். 

நடிப்பில் எப்போதும் கேரக்டர் முக்கியம் என்று நான் கருதுகிறேன். கதைக்கு ஏற்ற படி அந்த கேரக்டர் இருக்க வேண்டும். எனவே எனக்கு பணம் முக்கியம் அல்ல கேரக்டரே முக்கியம் என்ற ஆணித்தரமான பதிலை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இது வரை எந்த நடிகையும் இப்படி ஓப்பனாக கூறியது இல்லை. வாணி போஜன் தற்போது தெரிவித்திருக்க கூடிய கருத்து தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.