"பொன்னி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை..!" - இனி இவருக்கு பதில் இவர்தானாம்..!

 

சீரியல்கள் என்றாலே சன் டிவியை தான் அனைவரும் கூறுவார்கள் ஆனால் சன் டிவியில் போட்டியாக விஜய் டிவியும் பல சீரியல்களை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

அந்த வகையில் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாக வந்த பொன்னி சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் வெளியேறி இருக்கிறார் என்ற தகவலை தற்போது பகிர்ந்து இருக்கிறார்கள். 

இந்த பொன்னி சீரியல் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது. எல்லா வயதினரும் விரும்பி பார்க்கக் கூடிய வகையில் இருப்பதால் இந்த சீரியலுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என கூறலாம். 

கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் ஏறக்குறைய 160 எபிசோடுகளை கடந்துவிட்ட நிலையில் பெங்காலியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு சீரியலின் தமிழ் ரீமேக் ஆகத்தான் வந்துள்ளது. 

இந்தத் தொடரை ராஜா ராணி பகுதி இரண்டு தொடரை இயக்கிய மனோஜ் குமார் இயக்க வைஷு சுந்தர் ஹீரோயினியாகவும், சபரிநாதன் ஹீரோவாக நடித்த வருகிறார்கள். மேலும் இந்த தொடரில் குறிப்பிட்ட வேடங்களில் ஷமிதா ஸ்ரீகுமார், சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன், வருண் உதய், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

இதனை அடுத்து இந்த சீரியலில் அம்மாவாக நடித்த ஷமிதா ஸ்ரீ குமார் தற்போது சீரியல் இருந்து விலகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர் ஜெயலக்ஷ்மி என்ற அம்மா ரோலில், சீரும் சிறப்புமாக செய்து வந்த நிலையில் எதற்காக இந்த தொடரை விட்டு வெளியேறினார் என்பது தெரியவில்லை. 

எனவே இனிமேல் இந்த கேரக்டர் ரோலை சிந்துஜா என்பவர் செய்ய இருப்பதாக சீரியல் குழு தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான உங்கள் ஆதரவை கொடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எங்களது பக்கத்தை ஷேர் செய்து விடுங்கள்.