எடுப்பார் கை பிள்ளையாக மாறிவிட்டார்கள் என்று கூறக்கூடிய வாசகம் உங்களுக்கு தெரியும் அல்லவா? அது போல திரையுலத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவனின் நிலைமை தற்போது தன் மனைவியின் கைப்பிள்ளையாக மாறிவிட்டார் என கூறக்கூடிய அளவு உள்ளது.
இதற்குக் காரணம் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் பிசியாக இருக்கிறார். மேலும் தனது பிசினஸை வளர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் சரியான லாபத்தையும் பார்த்து வருகிறார்.
ஆனால் இவரது கணவன் விக்னேஷ் சிவனோ தனது கேரியரை பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
அஜித் வேண்டாம் என்று தூக்கி போட்டதால் விக்னேஷ் சிவனின் திரை உலக வாழ்க்கை அஸ்தமித்து விட்டது என்று பலர் கூறினார்கள்.
அதற்கு ஏற்றது போல் தான் தற்போது வரை எந்த ஒரு வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய கேரியரில் மட்டுமே அதீத கவனத்தை செலுத்துவதோடு, தன்னை சிறப்பாக மாற்ற எல்லா விஷயத்திலும் தன் கணவரை யூஸ் செய்கிறார் என்ற பேச்சு வந்துள்ளது.
ஆனால் இவரது கணவர் விக்னேஷ் சிவன் அடுத்த கட்ட சினிமா வாய்ப்பை நோக்கி நகர முடியாமல் தற்போது தவித்து வருகிறார்.
இதற்குக் காரணம் நயன்தாரா. இவர் தன்னுடைய கேரியரை சிறப்பாக மாற்ற விக்கியை கருவியாக பயன்படுத்தும் யுக்தியை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் தனது தொழிலில் உச்சத்தை எட்டி இருக்கும் நயன்தாரா தனது கணவர் தான் பேசும் பேச்சுக்கள் ஏற்ற படி தலையாட்ட கூடிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாகவே மாற்றிவிட்டார்.
இனி மேல் விக்கியால் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு போக முடியாது.
அந்த அளவிற்கு விக்னேஷ் சிவனின் கேரியரில் இவர் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டாமல் இருப்பது இவரது சுயநலமே என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி இருக்கிறார்கள்.
இப்படியே இருந்தால் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
எனவே நயன்தாராவிற்கு அடிமையாக இருந்தால் நிச்சயம் விக்னேஷ் சிவனின் கேரியர் பாலாய் போய்விடும்.
எனவே இனியாவது விக்னேஷ் சிவன் தன்னுடைய கேரியரில் முழு கவனத்தை செலுத்தி ஓரளவுக்கு படங்களை செய்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். இல்லையென்றால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.