திருமண பந்தம் ஸ்ட்ராங்காக வேண்டுமா..? - ரகசியத்தை சொன்ன காயத்ரி யுவராஜ்..!

 

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். ஆனால் அந்த திருமண பந்தம் ஸ்ட்ராங்காக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற ரகசியத்தை தான் தற்போது உடைத்து சொல்லி இருக்கிறார் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ். 

இந்த கருத்துக்கள் அனைத்தும் திருமணமான தம்பதிகளுக்கு மிகச் சிறந்த பாடமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் திருமணம் செய்து கொள்ள போகின்றவர்கள் இதனை உணர்ந்து செயல்பட்டால் கட்டாயம் இவர்கள் வாழ்க்கையில் எந்தவித பூசல்களும் ஏற்படாமல் சிறப்பாக வாழ முடியும். 

உங்களது திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் முடிவு செய்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு பிறகு நீங்கள் எப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை மற்றும் உங்களது திருமண பந்தம் உறுதியாக இருக்கும் என்பதை இனி காணலாம். 

காதலிக்கும் நிலையை கடந்து திருமணத்திற்கு பிறகு மணமக்கள் இடையே ஒரு இடைவெளி ஏற்படும். இந்த இடைவெளி அவர்களின் அன்பில் ஒரு தொய்வை கொடுக்கும். இதற்கு காரணம் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய ,இருவரும் பணத்தை நோக்கி ஓடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நீங்கள் எளிது எட்டிப் பிடித்து விடலாம். 

இந்த காரணத்தால் உங்களுக்கு இடையே இருக்கும் காதலை வெளிப்படுத்தக்கூடிய நேரம் குறைவாக மாறுவதோடு, அதற்கான நேரத்தை நீங்கள் செலவு செய்ய மாட்டீர்கள். இதன் மூலம் கணவன் மனைவியிடையே சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் இந்த பிரிவின் காரணத்தால் உங்களுடைய சிறு இடைவெளி ஏற்படுவதோடு மன அழுத்தமும் ஏற்படும். இந்த காரணத்தால் இருவர் மத்தியிலும் பல பிரச்சனைகள், மனக்கசப்புகள் ஏற்படும். 

உங்கள் இருவரில் யார் தவறு செய்தாலும் அதை நீங்கள் பூதாகரமாக நினைப்பதோடு, இருவருமே பொறுமையாக இருக்காமல் தடாலடி முடிவுகளை எடுக்க முயற்சி செய்வீர்கள். 

இதனை நீங்கள் தவிர்த்து விட்டு பொறுமையோடு தீர்க்கமான முடிவுகளை யோசித்து எடுப்பதால் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படாது என்ற உண்மையை தற்போது அவர் உணர்ந்து பகிர்ந்து இருக்கிறார். 

இவருக்கும் இது போல கடுமையான மன உளைச்சல் ஏற்பட்ட சமயத்தில் தான் தன் கணவரோடு சண்டைகள் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து சில காலம் அவரை பிரிந்து வாழ்ந்த பின்னர் உண்மையை உணர்ந்து கொண்டதாகவும் கூறி இருக்கிறார். இங்கு பிரிவு என்பது விவாகரத்தை உணர்த்தவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.