ஒரு பீலிங்கா.. இருக்கு சொல்லலாமா.. வேண்டாமா? - ப்ரோமோவில் பூர்ணிமா காதல் புலம்பல்..!




தற்போது பரபரப்பாக நடந்து வரும் பிக் பாஸ் 7 வீட்டில் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் தினம், தினம் புது, புது வகைகளில் பூகம்பம் வெடித்து வருகிறது. அந்த விஷயங்களும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது என கூறலாம். 

பிக் பாஸ் 7 வீட்டில் ஆரம்பத்தில் மணி-ரவீனா காதல் விவகாரம் பெரிதளவு பேசப்பட்டது. இதனை அடுத்து நிக்சன்- ஐஷு ஜோடிகள் பற்றிய விதவிதமான கதைகள் வெளி வந்தது. 

இதனை அடுத்து வீட்டில் இருந்து ஐஷு வெளியேறினார். இந்த சூழ்நிலையில் தற்போது பிக் பாஸ் 7 மூன்றாவது ப்ரோமோ வெளி வந்துள்ளது. இந்த ப்ரோமோவில் பூர்ணிமா விஷ்ணுவிடம் நீங்க ஏதோ ஒன்னு பண்ணுறீங்க.. நீங்க செய்யறது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று உருகி, உருகி பேசி இருக்கிறார். 


அது மட்டுமல்லாமல் ஒரே பீலிங்காக இருக்கு அதை சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை என்று உளறி இருக்கிறார் மேலும் அப்படி சொன்னால் அந்த விஷயத்துக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள் என தெரியவில்லை என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார். 

இந்த பிரமோ தான் தற்போது இணையத்தில் பரவி வைரலாகிவிட்டது. இந்த வீடியோவை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருவதோடு பூர்ணிமாவின் காதல் புலம்பலை பற்றி நக்கலாக கிண்டல் அடித்து வருகிறார்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்துவிட்டு வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.