குழந்தை நட்சத்திரமாக நடித்தே பல கோடி சொத்து சேர்த்த நடிகை..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

2011 ஆம் ஆண்டு வெளி வந்த 404 என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் தான் சாரா அர்ஜுன். இந்த படத்தில் இவர் நடிக்கும் போது இவருக்கு வயது ஐந்து தான். இதனை அடுத்து இதே ஆண்டில் தமிழில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

சீயான் விக்ரமின் மகளாக சாரா தெய்வத்திருமகள் படத்தில் நடித்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றார். இந்தப் படம் தந்தை, மகளுக்கு இடையே ஆன உறவை மிக அழகாக எடுத்துக்காட்டியது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் மற்றும் சாராவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது என்று தான் கூற வேண்டும். 

முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததை அடுத்து சாராவுக்கு ஏ எல் விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஹலிதா ஷமீர் இயக்கிய சில்லு கருப்பட்டி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மேலும் சாரா மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். 

இந்த கேரக்டர் ரோலில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய சாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அத்தோடு இந்திய திரை உலகிலேயே அதிக அளவு சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றார். 

கடந்த 10 ஆண்டுகளில் சாராவின் சொத்து மதிப்பு சுமார் 10 கோடி அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் போதே கோடிக்கணக்கில் சம்பாதிக்க கூடிய சின்ன பெண்ணாக சாரா இருந்திருக்கிறார். 

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் சின்ன வயதில் எவ்வளவு பணம் சம்பாதித்து இருக்கிறார் என்று ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.