தமிழ், மலையாளம் என திரை உலகில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வில்லன் நடிகனான கலாபவன் மணி மரணம் திரை உலகை உலுக்கியது. மேலும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த சந்தேகத்தின் மர்ம முடிச்சுகள் தற்போது உடைக்கப்பட்டு அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பதை ஐபிஎஸ் அதிகாரி விளக்கி இருக்கிறார்.
நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் வலம் வந்த மலையாள முன்னணி நடிகரான கலாபவன் மணி, மிமிக்ரி கலைஞராக ஆரம்ப காலத்தில் திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் மலையாளத்தில் முதல் முதலில் அக்ஷரம் என்ற படத்தில் ரிக்ஷா ஓட்டுநராக நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இவர் மலையாள முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார். இதனை அடுத்து மறுமலர்ச்சி திரைப்படத்தில் தனது நடிப்புத் திறனை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளி வந்த ஜெமினி திரைப்படத்தில் இவர் தேஜா என்ற வில்லன் கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிந்தது.
அந்த வரிசையில் விஜயகாந்தின் தென்னவன், மாதவன், எஸ்.ஜே சூர்யா, சிம்பு போன்ற நடிகர்களோடு இணைந்து வில்லன் கதாபாத்திரத்தை செய்தார். மேலும் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினியுடன் இணைந்து எந்திரன் படத்திலும் கமலஹாசன் ஒரு சேர்ந்து பாபநாசம் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்ததை அடுத்து இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. முதலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவில் இவரது உடலில் ரசாயன பொருட்கள் கலந்து இருந்ததால் ஒரு சமயம் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
மேலும் இந்த வழக்கினை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் என்பவர் தற்போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவலின் படி ஒரு நாளைக்கு 12 முதல் 13 பீர் பாட்டில்களை கலாபவன் மணி குடிப்பாராம்.
இதனால் அவரது கல்லீரல் செயல் இழந்து போய் உள்ளது. அது மட்டுமல்லாமல் அவரது உடலில் மெத்தில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்ததின் காரணமாகத்தான் மரணம் நிகழ்ந்துள்ளது என்ற பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.