அண்மை காலமாக கணினி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதை அடுத்து விதவிதமாக போட்டோக்களை மாற்றி அமைப்பதையும் வீடியோக்களை மாற்றி டீப் பேக் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
அதுபோல ரஷ்மிகா மந்தானாவின் வீடியோ ஒன்று டீப் பேக் வீடியோவாக வெளி வந்து கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதை அடுத்து பிரபலங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இதற்கான கண்டனங்களை வெளிப்படுத்தினார்கள்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் சில நடிகைகளின் வீடியோக்கள் வெளிவந்து இது போன்ற குற்றங்களுக்கு சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக திகழும் ரேகா நாயர் அண்மை பேட்டி ஒன்றில் இது பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் இந்த பேட்டியில் ஹீரோயின்களுக்கு நடக்கக்கூடிய பிரச்சனைகளை விளக்கமாக காமெடி நடிகர் விஜய்யன் Youtube-ல் பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில் இவரோடு இணைந்து வீடியோ ஒன்றை செய்து இருக்கிறார்.
இந்த வீடியோவில் இவர் இடுப்பு தெரிவது போன்ற காட்சி இருந்தது.
அது என்னுடைய இடுப்பா? என்றால் இல்லை. அது எடிட்டிங் செய்யப்பட்டதா? என்றாலும் தெரியவில்லை.
என் இடுப்பு அடுப்பு போல இல்லை என்ற கருத்தை கூறியிருக்கும் இவர் இந்த இடத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரேகா நாயர் ஆபாச படம் லீக் என்று தலைப்பிட்டு சிலர் பதிவிட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் புடவை விலகினாலே அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போடக்கூடிய அளவு இன்று தரம் கெட்ட மனிதர்கள் போலித்தனமாக உலாவி வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இது பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தால் வீட்டுக்கு வாங்க வெச்சு செய்து அனுப்புகிறேன் என்று பதிலடி தந்திருக்கிறார்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள் மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.