குழந்தை இருக்குன்னு கெஞ்சியும் விடல.. - முன்னணி இயக்குனர் குறித்து நடிகை மீனா பகீர்..!

 

குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகம் ஆகி குழந்தை நட்சத்திரமாக யாருடன் நடித்தாரோ அந்த நடிகருடனே ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா. இவர் சூப்பர் ஸ்டாருடன் குட்டி சிறுமியாக நடித்து பின்பு வளர்ந்து பெரியவர் ஆன பிறகு ஹீரோயினியாக முத்து படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர்.

ஊரடங்கு காலகட்டத்தில் கொரோனா அச்சுறுத்திய சமயத்தில் இவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தது திரைத்துறை மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர பல நாட்கள் மீனாவிற்கு பிடித்தது. 

இதனை அடுத்து நடிப்பில் கவனத்தை செலுத்தி வந்த மீனா அண்மையில் பேட்டி ஒன்று சில படங்களில் தான் நடித்ததை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் இவர் பல வருடங்கள் கழித்து தனக்கு கம் பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்த திரைப்படம் திரிஷ்யம். 

இந்தப் படம் பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் கதையைக் கேட்ட பிறகு தனக்கு பிடித்து இருப்பதாகவும், ஆனால் பாடப்பிடிப்பு கேரளாவில் என்பதால் தன்னால் அந்த படத்தை ஒப்புக் கொள்வது கடினம் என்ற விஷயத்தை படத்தின் தயாரிப்பாளரிடம் கூறினேன். 

இதற்கு காரணம் நைனிகாவிற்கு அப்போது இரண்டு வயது மட்டுமே இருந்ததால் என்னால் அவளை விட்டு வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எனினும் படக் குழுவினர் என்னை விடாது தொந்தரவு செய்தார்கள் நீங்கள் மட்டும்தான் அந்த ரோலில் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறியதோடு, உங்களுக்கு உரிய எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம். 

தயவு செய்து படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வற்புறுத்தினார்கள். மீண்டும், மீண்டும் இவர்கள் கேட்டதால் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். 

இந்த விஷயம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இரண்டு வயது குழந்தையை வைத்துக்கொண்டு மீனா இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பலரும் பல விதமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.