மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று கூறுவார்கள் அது போல கணவன் அமைவதும் அப்படித்தான் அதுவும் பிரசவமாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் கணவன் அருகில் இருந்தால் அது கிடைக்கும் சுகமே தனி என்று கூறலாம்.
அதனை எல்லா பெண்களும் எதிர்பார்த்து காத்து இருப்பதோடு கணவன் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் விரும்புவார்கள்.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து நடித்து வரும் செயல் ரவியின் மனைவி ஆர்த்தி தற்போது தன் கணவர் பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் திரை உலகில் மட்டுமல்லாமல் தன் குடும்பத்திலும் ஜெயம் ரவிக்கு என்று நல்ல மதிப்பெண் உள்ளது என்றுதான் கூற வேண்டும் எந்த மதிப்பெண்ணை அழைத்ததே இவரது மனைவிதான் தனது கணவருக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணை வழங்கியிருக்கும் இவர் தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டவர் ஜெயம் ரவி என்று கூறியிருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதை எடுத்து அவர் கர்ப்பிணியாக இருக்கும்போது அதிகாலை நேரத்தில் பசி ஏற்பட்டால் இவரை எழுந்து தன் மனைவிக்கு தேவையான உணவை செய்து கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கர்ப்பமான சமயத்தில் வாந்தி ஏற்படும் போது அந்த வாந்தியை கையேந்தி பிடித்து எடுத்து இருப்பதாகவும் தெரிவித்து மற்றவர்களும் இது போல் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தன் கணவரை கூறியிருக்கிறார்.
அதிகாலையிலேயே தனக்கான உணவை சமைத்து தந்த இவர் ஷூட்டிங் க்கும் காலை நேரத்தில் கிளம்பி சென்று விடுவார். பிரசவ சமயத்தில் தன்னோடு இல்லாமல் போனதற்கு தொழில் காரணமே ஒழிய என் மீது எப்போதும் பேரன்பில் இருக்கக்கூடியவர் என் கணவர் என்று நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.
அண்மையில் தான் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த இறைவன் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. மேலும் பல படங்களில் தனது வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய ஜெயம் ரவி நிஜ வாழ்விலும் மிகச்சிறந்த துணையாக தன் மனைவிக்கு விளங்குகிறார் என்பதை அவரது மனைவி வழங்கிய மதிப்பினில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.