“சொப்பன சுந்தரிக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த பிரபல இயக்குனர்..!! - பல ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

 

சினிமாவில் நடித்து வரும் நடிகைகளுக்கு அந்தரங்க டார்ச்சர் என்பது பல காலமாக நடந்து வருவதாக பல வகைகளில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தாலும், அதனை தடுக்கக்கூடிய சட்ட திட்டங்கள் இன்று வரை இல்லை என்பது வேதனையான விஷயமாக உள்ளது.

மேலும் இது போல குற்றங்கள் நடக்குமா? என்ற கேள்வியை ஏற்படுத்தி இருப்பதோடு இந்த குற்றங்களை உறுதிப்படுத்த கூடிய தகுந்த சாட்சியங்கள் கிடைப்பதும் அரிதாக உள்ளது. 

ஆனால் ஒரு சில அந்தரங்க டார்ச்சர்களுக்கு ஆதாரமாக ஆடியோ இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் பிஸ்மி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை அடுத்து விஜய் சேதுபதியை தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் இது போன்ற அந்தரங்க டார்ச்சரில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற செய்தி பலரது மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. விஜய் சேதுபதியின் திரை உலக வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வைத்த அந்த இயக்குனர் கூடல் நகர் படத்தில் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி. 

இவர் விஜய் சேதுபதியை வைத்து தென் மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியிருக்கிறார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் இணைந்து தர்மதுரை, மாமனிதன், இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த படத்துக்கு ஜோடியாக விஜய் சேதுபதிக்கு நடிகை மனிஷா யாதவ் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் சீனு ராமசாமி அந்த படத்தில் நடித்த மனிஷா யாதவுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். 

மேலும் வழக்கு எண் 18/9 என்ற படத்தில் அறிமுகமான மனிஷா யாதவ் தொடர்ந்து சில படங்களில் நடித்த சமயத்தில் தான் சீனு ராமசாமி அவரை டார்ச்சர் செய்ததை மனிஷா யாதவ் பிஸ்மிக்கு போன் செய்து எல்லா விஷயங்களையும் சொல்லி கதறி அழுதுதிருக்கிறார்.

இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடந்த பொழுதுதான் இது போன்ற டார்ச்சரை மனிஷாவிற்கு இயக்குனர் தந்திருக்கிறார் எனவும் கண்ணீர் விட்டு கதறிய நடிகை பின்னர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பியதாக கூறியிருக்கிறார். 

இப்போது அந்த நடிகையின் வாக்கு மூலம் தன்னிடம் இருப்பதாகவும் இவரைப் போன்ற இயக்குனர்களை அப்படியே விடுவது எப்படி என்ற கேள்வியையும் முன் வைத்து இருக்கிறார். திரை உலகில் ஒரு பெரிய மனிதரைப் போல் வேஷம் போடும் இயக்குனர் சீனு ராமசாமியின் இன்னொரு முகம் தற்போது தெரிந்தது. 

இவர் கொடுத்த டார்ச்சரை தாங்காமல் தான் மனிஷா யாதவ் திரை உலகை விட்டு ஒரு காலகட்டத்தில் வெளியேறிவிட்டார். தற்போது அந்த விவகாரத்தைப் பற்றி திரை விமர்சகர் பிஸ்மி கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இணையத்தில் தற்போது இந்த விஷயம் தான் பேசும் பொருளாகி விட்டது.