தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஆலியா மானசா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி பகுதி ஒன்று சீசனில் அற்புதமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்தத் தொடரில் தன்னோடு இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா மானசாவிற்கு தற்போது ஆசைக்கு ஓரு பெண், ஆஸ்திக்கு ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு இவர்கள் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
என்ன தான் கணவர் என்றாலும் இப்படி எல்லாம் வீடியோவை எடுத்து பதிவிடுவார்களா? என்று பலரும் பலவிதமான கருத்துக்களை தற்போது பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது சஞ்சீவ் கயல் சீரியலில் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்ற வேளையில் ஆலியா மானசாவும், சஞ்சீவும் படு ரொமான்டிக்கான வீடியோ ஒன்றை ரீலீஸ்சில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
அதுவும் காதலிக்க ஆசை இல்லை கண்கள் உன்னை பார்க்கும் வரை என்ற பாடல் வரிகளை தெறிக்க விட்டு அதற்கு ஏற்றது போல வீடியோவை பதிவு செய்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தனது மனைவியின் உதட்டில் அழகாக லிப் லாக் முத்தத்தை பதித்திருக்கும் சஞ்சய் தனது காதலை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த வீடியோவானது பரவலாக இணையத்தில் தற்போது பரவி அதிக அளவு பார்க்கப்பட்டு வருவதால் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்.