விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர் என்றாலும் சீரியல்களில் நடிக்க கூடிய நாயகன், நாயகி என்றாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை தவறாமல் செய்து வருகிறார்கள்.
மேலும் அந்த கலைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதோடும் மட்டுமல்லாமல், அந்த கலைஞர்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அடிக்கடி திரையில் அவர்களை காட்டி காண்டாக வைத்து விடுவார்கள்.
அந்த வகையில் தற்போது மக்களால் விரும்பப்பட்ட சீரியல் நடிகை ஒருவர் இனி விஜய் டிவி பக்கமே தலை காட்டப் போவது இல்லை என்று ஒரு பெரிய கும்பிட போட்டு வேண்டாம் என்று சொல்லக்கூடிய நிலைக்கு வந்துவிட்டார் என கூறலாம்.
மற்ற தொலைக்காட்சிகளை ஒப்பிடும்போது விஜய் டிவியில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயினிகளுக்கான பேன் பேஸ் அதிகம் இருப்பதோடு மட்டுமல்லாமல் உற்ற சப்போட்டாய் விஜய் டிவி கொடுப்பதின் காரணத்தால் விரைவில் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்த சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூத்த மருமகள் தனம் எனும் கேரக்டரில் விஜய் டிவியில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டிருந்த இந்த சீரியலின் கதை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் இதனுடைய காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்க கூடிய வகைகள் அமைந்திருந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
அதுமட்டுமல்லாமல் தம்பி குழந்தைகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் விட்டுக் கொடுக்கக்கூடிய கதை அம்சமானது பல கதைகளில் பார்த்து ரசிகர்களுக்கு புளித்துப்போன ஒன்றுதான். இந்த ரோலை செய்த சுஜிதாவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைத்து செய்து விட்டார்கள்.
மேலும் சீரியலின் இறுதியில் தனத்துக்கு கேன்சர் வந்து வீட்டுக்கு தெரியாமல் ட்ரீட்மென்ட் எடுத்த காட்சிகள் ரசிகர்களால் அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து இந்த தொடர் முடிந்து விட இரண்டாவது பாகத்தை ஆரம்பிக்க சுஜிதா அந்த சீரியலில் நடிக்க மறுத்துவிட்டார்.
மேலும் முதல் பகுதியில் அவர் அதிக அளவு கிண்டலுக்கு உள்ளானது தான் இதற்கு காரணம் என்று பலரும் பேச்சுக்களை பேசி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் சுஜிதா சில மாதங்களுக்கு முன்பு ஜெமினி டிவியில் கீதாஞ்சலி எனும் சீரியலில் கமிட் ஆகிவிட்டார்.
தற்போது அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சுஜிதா மீண்டும் இந்த சீரியலில் நடித்தாலும் அது போலத்தான் பகுதி இரண்டிலும் ட்ரோல் செய்யப்படுவார் என்பதால் அவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு விரும்பாமல் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று கூறுகிறார்கள்.
மேலும் பாண்டியன் ஸ்டோர் பகுதி ஒன்றில் நடித்த ஹேமா மற்றும் பிரசாந்த் எந்த சீரியலில் மீண்டும் நடிக்க இருப்பதாக உள்ள நிலையில் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இது போன்ற கேலி கிண்டல்கள் இருந்து தப்பித்துக் கொள்ள விஜய் டிவியின் பக்கம் இனி தலை வைத்து படுக்க வேண்டாம் என்று சுஜிதா முடிவு எடுத்துவிட்டாரா? என்று கூறக்கூடிய வகையில் பாண்டியன் ஸ்டோர் பகுதி இரண்டில் அவர் நடிப்பதற்கு மறுத்திருப்பது அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாகி விட்டது.