"அட.. இவுங்க தான் பிக் பாஸ் பிரதீப்பின் கேர்ள் ஃபிரெண்டா..!" - வைரலாகும் ஃபோட்டோ..!


விஜய் டிவியில் பிரம்மாண்ட முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி 7-ல் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி தற்போது தனது கேர்ள் பிரண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 

பிரதீப் ஆண்டனி அருவி, யாழ், டாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு இவருக்கு பெயர் கிடைத்ததா? என்றால் சந்தேகம் தான். எனினும் பிக் பாஸ் 7 ஒட்டுமொத்தமான புகழையும் இவருக்கு பெற்றுத் தந்துள்ளது. 

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் இறுதிப் போட்டி வரை முன்னேறி டைட்டிலை வென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

இதற்கு கூறப்பட்ட காரணம் பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று அவருடன் போட்டியிட்ட சக போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, ஜோவிகா போன்றவர்கள் கூறிய குற்றச்சாட்டு தான் என கூறலாம். 

இதனால் பிரதீப்பின் மீது உலகநாயகன் நடவடிக்கை எடுத்து ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றினார். எனினும் பிரதீப்பின் தரப்பு நியாத்தை கமலஹாசன் கேட்கவே இல்லை என்ற கருத்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் அவர் வெளியேற்றப்பட்டது தவறு என பலரும் குரல் கொடுத்தார்கள். 

இதனை அடுத்து உலக நாயகன் தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியதை அடுத்து, பிரதீப் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற நிலை உருவானது. 

தற்போது அதிக அளவு சினிமா வாய்ப்புகள் வரக்கூடிய நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி தன் Youtube சேனலில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 7 ரிவ்யூ செய்து வருகிறார். 

அந்த நிகழ்வுக்கு தான் பிரதீப் ஆண்டனி தன்னுடைய கேர்ள் பிரண்டை அழைத்து வந்ததாகவும், அந்தப் பெண் தான் பிரதீப்பின் கேர்ள் பிரண்ட் என சுரேஷ் சக்கரவர்த்தி அறிமுகம் செய்ததாக தற்போது இணையத்தில் புகைப்படம் வெளி வந்து வைரலாகி உள்ளது. 

நீங்களும் அந்தப் பெண் யார் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருந்தால் இந்த புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.