“ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் என பேரம் பேசிய நபர் ..! " - போட்டு உடைத்த பனிமலர் பன்னீர்செல்வம்..!

 

பனிமலர் பன்னீர்செல்வம் ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்திருக்கிறார். இதனை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருப்பார்.இவர் அடிக்கடி போட்டோக்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களுக்கு விருந்து வைக்கக் கூடியவர். 

பனிமலர் வெளியிடக்கூடிய கருத்துக்களை விரும்பாத இணையதள வாசிகள் அவரை நக்கல் அடிப்பதை எப்போதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். 

 இந்த பேட்டியில் இவர் ஒரு கடை திறப்பு விழாவுக்காக சிலர் என்னுடைய டீமில் பேசி இருக்கிறார்கள். அதில் ஒருவர் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு வாங்குவீர்கள் என்று கேட்க, சம்பளத்தை தான் கேட்கிறாரோ என்று நினைத்தோம். 

ஆனால் அந்த நபரோ கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் ஒரு லட்சம் தருகிறோம் அவுங்க கூட தங்க சொல்லுங்க என்று தரம் கட்ட விதத்தில் பேசி இருக்கிறார். சற்றும் இந்த பேச்சை எதிர்பார்க்காத என்னுடைய டீம் மேட் ஃபோனை கட் செய்து விட்டதோடு மட்டுமல்லாமல், பிளாக் செய்ய செய்தும் விட்டார்கள். 

இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து பெண்களுக்கு மோசமாக தினமும் பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. இது போன் காலோடு நின்று விடாமல் இரவு நேரத்தில் வீடியோ கால்கள், தேவையில்லாத மெசேஜ்கள் என வருவதாக பனிமலர் கூறி இருக்கிறார். 

மேலும் வீடியோ கால் ஒன்றை அட்டென்ட் செய்தால் அதற்கும் தனியாக ரேட் பிக்ஸ் செய்து பேசுகிறார்கள் என பனிமலர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எவ்வளவுதான் மனிதர்கள் வளர்ச்சி அடைந்து விட்டாலும் பெண்கள் விஷயத்தில் அவர்கள் ஆல்ப புத்தியை காட்டுவது இன்னும் தொடர்கதையாக தான் உள்ளது.மேலும் இது மாதிரியான நிகழ்வுகளுக்கு அவரவர்கள் திருந்தினால் மட்டுமே நன்மை நடக்கும் என கூறலாம். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள்.