பாத்துகிட்டே இருக்கலாம் போல.. வயசு வெறும் நம்பர் தான்..! - சூட்டை கிளப்பும் நயன்தாரா..!

 

நடிகையர் திலகம் போல தற்போது நடிகைகளின் சூப்பர் ஸ்டாராக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்துக்குப் பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். 

மேலும் இவர் தனது 38 வது வயதில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாக திகழ்கிறார். அண்மையில் பாலிவுட்டில் இவர் நடித்து வெளி வந்த ஜவான் படம் மிகச்சிறந்த வரவேற்பை அவருக்கு கொடுத்துள்ளது. 

இவரை பொறுத்தவரை கிளாமரான காட்சிகளானாலும் சரி, அடக்க ஒடுக்கமான சீனாக இருந்தாலும் சரி மிகச் சிறப்பான முறையில் நடித்து விடுவார். இவர் நடிப்பதோடு நின்று விடாமல் பல வகையான பிசினஸ்களை செய்து வருகிறார். 


சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஓவர் மேக்கப் போட்டு சேலை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த விளம்பர போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். முன்பு இருக்கக்கூடிய அந்த கவர்ச்சி தற்போது நயன்தாராவிடம் இந்த விளம்பரத்தில் காணவில்லை என்பதை குறிப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். 

வேறு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். அந்த அளவுக்கு வரும் நேர்த்தியான முறையில் இவரது மேனி அழகு வெளிப்பட்டு இருக்கிறது என்று கலவை ரீதியான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். 


இளசுகளில் இதயத்தை பதம் பார்த்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து சூடு அதிகமாகி விட்டது என்று சிலர் கூறி வரும் நிலையில் இந்த புகைப்படத்தில் மகாராணியாக நயன் ஜொலிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தற்போது உலகநாயகன் கமலஹாசன் படத்தில் இவர் நடிக்க ஒப்பு கொண்டு இருப்பதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் அந்த திரைப்படம் எப்போது வெளிவரும் என்பதற்காக காத்திருக்கிறார்கள்.