மலையும், மலையும் மோதினால் எப்படி இருக்குமோ? அப்படித்தான் இனி இந்த திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் பேசிக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் எதிரும் புதிருமாக நீயா? நானா? என்று திரை உலகில் யார் முன்ணனி நாயகி என்று போட்டி போட்டு வந்த நயனும், திரிஷாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அது எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரக்கூடிய இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து உள்ளது தான் தற்போது கோலிவுட்டில் வைரலாக பரவக்கூடிய விஷயமாக உள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது 40 வயதை நெருங்கி விட்டாலும் இந்த அளவும் எவர்கிரீன் நடிகைகளாக காட்சி கொடுப்பதால் ரசிகர்கள் விரும்பக்கூடிய இடத்தில் இன்னும் இருக்கிறார்கள்.
ஹோலிவுடிலும் உள்ள டாப் நடிகர்களின் படங்கள் எல்லாம் இவர்களின் கைவசம் தான் உள்ளது என்று கூற கூடிய அளவிற்கு இருவரும் படு பிஸியாக இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் திரிஷா அண்மையில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்க அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிற வேளையில் பாலிவுட்டில் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தழுவி இருக்கிறார்.
இதனை அடுத்து நயன்தாரா மண்ணாங்கட்டி, அன்னபூரணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருவரும் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் ஒரு படத்தில் கூட இது வரை இணைந்து பணியாற்றியதாக கூற முடியாது.
இனி இவரும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் முதன் முறையாக திரிஷாவும், நயன்தாராவும் இணைந்து ஒரே படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
அதுவும் எந்த கதாநாயகனுடன் தெரியுமா?
உலக நாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் கேஎச் 234 படத்தில்தான் இந்த இரண்டு நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.