கல்யாணத்துக்கு அப்புறம் இதை பண்ணக்கூடாது.. மருமகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட நடிகர்..!

 

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகனாக, வில்லனாக பல விதமான குண சித்திர நடிப்பை பக்காவாக வெளிப்படுத்தி பிரபலமான காமெடி நடிகர் தற்போது தனது மருமகளுக்கு ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு இருக்க கூடிய செய்தி திரை உலகினரை மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. 
ஏற்கனவே இந்த காமெடி நடிகனை பற்றி பலவிதமான கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் ஒரு பேட்டியை முடித்துக் கொண்ட இவர் தன்னை பேட்டி எடுத்த தொகுப்பாளினியின் நம்பரையே கேட்டு வாங்கி இருக்கிறார் என்றால் இவரது தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் நம்பரை வாங்கியதோடு விடாமல் அந்த தொகுப்பாளினிக்கு போன் செய்து எப்போதும் மீட் பண்ணலாம் என்ற விஷயத்தை கேட்க அந்த தொகுப்பாளனி காமெடி நடிகரை கண்டபடி திட்டி தீர்த்து போனை வைத்து விட்டார். 

இந்த நிகழ்வு ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இந்த காமெடி நடிகரின் மகன் பிரபல நடிகரின் மகளை காதலித்து வந்தது அனைவருக்கும் நன்றாக தெரியும். இதனை அடுத்து இரு வீட்டாரின் சார்பில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. 


திருமணம் நடப்பதற்கு முன்பே அந்த காமெடி நடிகர் தன் மருமகளிடம் திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவில் நடிக்கக்கூடாது என்ற கண்டிஷனை போட்டிருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். 

 இந்த நிலையில் யார் அந்த காமெடி நடிகர் என்பதை தற்போது நெட்டிசன்கள் புரிந்து கொண்டு அந்த காமெடி நடிகர் தம்பி ராமையா என்று அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

இந்த சூழ்நிலையில் இந்த கருத்து உண்மையா? என்பது இது வரை வெளி வராத நிலையில் இது போன்ற பேச்சுக்கள் வலைதளத்தில் பரவலாக வந்துள்ளது என கூறலாம். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள் இந்த விஷயத்தை உங்கள் நண்பர்களோடும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.