90 காலகட்டத்தில் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை தான் விசித்ரா இவர் தமிழ் திரைப்படங்களில் ஏராளமான ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர்.
இதனை அடுத்து இவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து வேகமாக வளர்ந்து வந்த விசித்ரா திடீர் என சினிமாத்துறைக்கு பை, பை சொல்லிவிட்டு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். தற்போது கணவர் குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
மேலும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய இவர் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டிலும் ஓட்டிங்கில் முதல் இடத்தைப் பெற்று ஏறத்தாழ 50 நாட்களுக்கு மேல் தன் நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே இவர் பைனல் லிஸ்டில் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்வில் மறக்க முடியாத நிகழ்வு பற்றி ஒரு டாஸ்க் இவர் பேசிய போது தன்னை பாலியல் ரீதியாக துன்பப்படுத்திய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பற்றி பேசினார்.
இந்த பேச்சு பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து பிரபல திரைப்பட விமர்சகரும் டாக்டரும் ஆன காந்தராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்து ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார்.
அதற்குக் காரணம் இவர் கூறிய விஷயத்தில் சினிமாவில் முத்த காட்சி, பெண்களுக்கு எதிராக இருக்கும் வன்கொடுமைகள் அனைத்தும் வெளிப்படையாகவே அரங்கி வருகிறது.
இதில் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும் என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் விசித்ரா கூறிய பாலகிருஷ்ணா மீது கூறிய புகாரை அடுத்து ஒருவேளை பாலகிருஷ்ணாவை அடைய விசித்ரா முயற்சி செய்து முடியாமல் போயிருக்கலாம். இதனால் அவர் மீது வீண் பழியையும் போட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு காலத்தில் பாலகிருஷ்ணாவிற்கு நிறைய பெண் ரசிகர்கள் இருந்தார்கள். அந்த அளவிற்கு ஆண் அழகனாகவராக திகழ்ந்திருக்கிறார். இதனை அடுத்து தான் விசித்ரா இப்படி சொல்லி இருப்பார் என்ற மிகப்பெரிய குண்டை டாக்டர் காந்தராஜ் போட்டிருக்கிறார்.