வயதில் மூத்த நடிகருடன் ராஷ்மிகா மந்தனா..! - ஓஹோ அப்படியா விஷயம்..!

 


ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட ராஷ்மிகா மந்தானாவை பற்றி அடிக்கடி கிசு கிசுக்கள் ஏற்படுவது இயல்பான விஷயமாக மாறிவிட்டது. 

இளைஞர்களின் கிரஷாக மாறி இருக்கும் இவரை பற்றி பரபரப்பான செய்திகள் அடிக்கடி இணையத்தில் வருகிறது. அண்மைக்காலமாக இவரை  பத்து வயது மூத்தவரான விஜய் தேவரகொண்டா உடன் இணைத்து கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில் அதற்கு ஏற்றது போல் வலைதளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனை அடுத்து இவர்கள் இருவரும் இந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை தற்போது எழுப்பியுள்ளது. மேலும் இந்த கிசுகிசு உண்மையானது என்பதை உணர்த்தக்கூடிய வலைதள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வெளி வந்துள்ளது. 

இந்தப் பதிவானது தீபாவளிக்காக பதிவிடப்பட்டுள்ளது என்று கூறலாம். மேலும் Instagram's பதிவில் ஹேப்பி தீபாவளி மை லவ் என ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஒரே வார்த்தைகளை பயன்படுத்தி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். 

இந்தப் பதிவு தான் இப்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற பதிவுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்த நிகழ்வு எதேர்ச்சியாக நடந்ததா? அல்லது இதில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்பது போல ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள். 


இதற்கான விடையை இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் கூறினால் மட்டுமே உண்மை தெரிய வரும். அது வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இப்படித்தான் தினமும் புதுப்புது வதந்திகள் வெளிவரும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக வண்ணத்திரை பக்கத்தில் லைக்குகளை போட்டு வண்ணத்திரைக்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.