கண்ணான கண்ணே சீரியலின் மூலம் மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்ட நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த பேட்டியில் இவரை எந்த ஆண்களுக்கும் பிடிக்காது என்றும் அதற்கான காரணத்தை விரிவாக கூறியிருக்கிறார்.
அதனைப் பற்றி இந்த பதிவில் நாம் இனி காணலாம்.
இவர் கல்லூரியில் நடந்த சம்பவத்தை தான் தற்போது நினைவு கூர்ந்து கூறி இருக்கிறார். கல்லூரியில் இவர் இருந்த போது குடிநீர் அருந்தும் இடத்தில் தோழிகள் நின்று இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து இவரும் நின்று இருக்கிறார்.
அப்போது வகுப்பு அறையில் இருந்து ஒரு மாணவன் வந்தான். அவன் கையில் வாட்டர் பாட்டில் இல்லை.
தன் கையில் இருக்கும் வாட்டர் பாட்டிலை பார்த்து கொடுங்கள் தண்ணீர் குடித்துவிட்டு அதனை நிரப்பிக் கொண்டு வந்து தருகிறேன் என்று என்னிடம் கேட்டான்.
ஆனால் நான் அவனிடம் உனக்கு கை, கால் நல்லாத்தானே இருக்கு நடந்து போய் வாட்டர் பாட்டில் எடுத்து வந்து குடி என்று கூறிவிட்டேன்.
இதனை அடுத்து அந்த மாணவன் தன்னுடைய நண்பர்கள் மத்தியில் என்னை படு பயங்கரமாக கூறி என்னை ஒரு ரவுடி போல சித்தரித்து விட்டான் போல் உள்ளது.
நான் வகுப்பறையில் இருந்து வெளியே செல்லும் போது அவனுடைய நண்பர்கள் அனைவரும் என்னை ஏதோ கமெண்ட் செய்து கடந்து சென்றார்கள். உடனே நான் அவனிடம் சென்று என்ன சொன்னீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் எதுவும் பேசாமல் இருக்க, நீ சொன்னதை என் முகத்துக்கு முன்பாக சொல்லு பார்க்கலாம் என்று கூறிய உடன் யாரும் வாய் திறக்காமல் அப்படியே நின்றார்கள்.
இதனை அடுத்து ஆண் நண்பர்கள் என்னிடம் பேச பயப்படுவார்கள்.
எனக்கும் ஆண்களுக்கும் சுத்தமாகவே ஒத்துப்போகாது. இவ்வளவு ஏன் எனக்கு ஆண் நண்பர்களே கிடையாது. என்னை கண்டால் ஆண்கள் பேசவே பயப்படுவார்கள்.மேலும் தயங்குவார்கள் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவருக்கும் நிமேஷிக்காவின் பேச்சு பரவலாக பேசப்பட்டு வருவதோடு இனியாவது ஆண் நண்பர்களை உங்களுக்கு துணையாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை. நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.