சின்னத்திரை இருந்து பெரிய திரைக்குச் சென்ற நாயகிகளில் ஒருவர் தான் ரேகா நாயர். ஆரம்ப காலத்தில் சின்ன, சின்ன வேடத்தில் நடித்த இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணத்தால் பெரிய திரை வாய்ப்பை பெற்றார்.
இவர் பிரபலமான சேனல் ஒன்றில் ஆண்டாள் அழகர் என்ற சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் இவரது கணவரால் இவருக்கு நிகழ்ந்த சோகங்களை பற்றி பகிர்ந்திருந்தார். அத்தோடு இந்த காரணங்களால் தான் இவர் தன் கணவரை விட்டு பிரிந்து விட்ட செய்தியையும் கூறினார்.
ஐஏஎஸ் பரீட்சை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி சென்ற சமயத்தில் இவரது கணவர் இவரது கல்விச் சான்றிதழ்களை கிழித்துப் போட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
இதனை அடுத்து அதை மனதில் வைத்துக் கொண்டு பல்வேறு பட்டப்படிப்புகளை படிக்க அதனை உத்வேகமாக எடுத்துக்கொண்டு படித்ததாக ரேகா நாயர் கூறியுள்ளார். மேலும் பல டிகிரிகளைப் பெற்ற இவர் அன்று தற்கொலை செய்து கொண்டிருந்தால் இன்று திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்க முடியாது.
படிப்பில் மட்டுமல்லாமல் தற்போது திரைத்துறையிலும் தனக்கு என்று ஒரு இடம் கிடைத்தது இந்த காரணத்தால் தான். மேலும் அந்த காரணத்தால் தான் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக ரேகா நாயர் ஓபனாக பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் தான் மனதில் படுவதை மட்டுமே பேசுவதாக கூறியிருக்கும் ரேகா நாயரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பெண்கள் முன்னேறலாம்.